மேலும் அறிய
பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு - விருத்தாசலம் அருகே சோகம்
சாலை விரிவாக்க பணி நடைபெறுகிறது என்று எச்சரிக்கை பலகை வைக்காததே சிறுவன் உயிரிழப்புக்கு காரணம் - மக்கள் குற்றச்சாட்டு

உயிரிழந்த சிறுவன்
நிழற்குடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழந்தார். நெடுஞ்சாலை துறையின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. தற்பொழுது அக்கிராமத்தில் பேருந்து நிழல் கூட அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தற்போது மழை நிரம்பி உள்ள நிலையில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் வினோத் குமார் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
விஜய மாநகரம் கிராமத்தில் வசிக்கும் ஜெயமூர்த்தி விஜயகுமாரி இவர்களுக்கு திருமணமாகி பதிமூன்று ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் இவர்களுக்கு ஒரே மகனான வினோத்குமார், 12 வயதான மகன் அதே கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை சாலையில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வரும் நிலையில் விஜயமாநகரம் கிராமத்தில் பயணிகள் நிழல் கூட அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டது நீண்ட நாள் ஆகியும் நிழல் கூடம் அமைக்கப்படாததால் தற்போது பெய்த கனமழையால் தொண்டப்பட்ட குழிகள் மழை நீரால் மூடப்பட்ட நிலையில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் வினோத்குமார் எதிர்பாராத விதமாக அக்குழியில் விழுந்துள்ளார்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை தூக்கினர். இதில் அவர் மூச்சுத் திணறி அதே இடத்தில் உயிரிழந்த நிலையில், அங்கு சாலை விரிவாக்க பணி நடைபெறுகிறது என்று எச்சரிக்கை பலகை வைக்காததே சிறுவன் உயிரிழப்புக்கு காரணம் என்று சிறுவனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை ஆன விஜயமாநகரம் கிராமத்தில் சிறுவனின் உடலை சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல் நடைபெறும் தகவல் அறிந்து வந்த மங்கலம்பேட்டை காவல் துறையினர் விருத்தாசலம் கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் மற்றும் விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் தனபதி நீண்ட நேர பேச்சு வார்த்தையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னர் சிறுவனின் உடலை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக ஆம்புலன்ஸ் அமரர் உறுதி மூலம் கொண்டு செல்லப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்
ஆட்டோ





















