மேலும் அறிய
Advertisement
கடலூர்: மக்கள் குறைதீர் கூட்டத்தில் செல்போனில் சமையல் குறிப்புகளை பார்த்து கொண்டிருந்த பெண் அதிகாரி
’’சமையல் குறிப்புகளை பார்த்து கொண்டிருந்த பெண் அதிகாரி சுமதி, ஆதிதிராவிட நலத்துறையில் பணியாற்றி வருகிறார்’’
உலகம் முழுவதும் கொரோனா தொற்றானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் மூன்றாம் அலை தொடங்கும் அபாயம் உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்களால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல அரசு சார்ந்த நிகழ்ச்சிகளும் குறைவான நபர்களே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறை கேட்பு கூட்டம் அந்த அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவும் காரணமாக குறை கேட்பு கூட்டத்திற்கு மக்கள் அனுமதிக்கப்படவில்லை, ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புகார் பெட்டி வைக்கப்பட்டு மக்களால் அதில் புகார் மனுக்கள் போடப்பட்டு வந்தன.
இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நேரடியாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதன் பேரில் இன்று கடலூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து துறை அதிகாரிகளின் முன்னிலையில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல மக்கள் மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்கள் அனைவரின் மனுக்களும் முதலில் அலுவலகத்தில் பதியப்பட்டு அவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டது அந்த டோக்கன் வரிசையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடக்கும் அறைக்கு வெளியே மாவட்ட ஆட்சியரின் வருகைக்காக காதுக்கொண்டிருந்தனர்.
பின் ஆட்சியர் வந்த பிறகு மக்கள் குறை கேட்பு கூட்டம் தொடங்கியது இந்த குறை கேட்பு கூட்டத்திற்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அனைத்து துறைகளை சார்ந்த பிரதிநிதிகள் வந்திருந்தனர். பின் மக்கள் அனைவரும் வரிசையாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் பின், அவர் அவர் மனுக்களில் குறிப்பிட்டிருந்த பிரச்சனைகளுக்கு ஏற்ப சம்பத்தப்பட்ட அதிகாரிகள் அழைக்கப்பட்டு அந்த இடத்திலேயே மக்களுக்கு பதில் அளிக்கப்பட்டு மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை ஆவண செய்யப்படும் என அதிகாரிகளால் பதில் அளிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு வந்திருந்த ஆதிதிராவிட நலத்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரி சுமதி கூட்டம் தொடங்கியதில் இருந்தே, பொதுமக்கள் கூறிய கோரிக்கைகள் பற்றி கவனிக்காமல் தனது கைப்பேசியை பயன்படுத்தி கொண்டிருந்தார். அப்போது அவர் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே தனது சமூக வலைதளங்களில் சமையல் குறிப்பு தொடர்பான வீடியோக்களை குறைகேட்பு கூட்டம் முடியும் வரை பார்த்து கொண்டிருந்தார். இவ்வாறு மக்கள் குறை கேட்பு கூட்டம் நடந்தது கொண்டிருக்கும் பொழுதே தனது கைப்பேசியில் சமையல் குறிப்பு வீடியோ பார்த்து கொண்டு இருந்தது அதிகாரியின் அலட்சியதினை காட்டுகிறது என பொது மக்கள் புலம்பினர். இதற்கிடையே பெண் அதிகாரி, கைப்பேசியில் சமையல் குறிப்பு பார்த்து கொண்டிருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
க்ரைம்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion