சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு அறை செயல்பாடு மீண்டும் தொடக்கம்..
சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு அறை கட்டுப்பாட்டு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மகாராஷ்ட்ரா, டெல்லி, குஜராத் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் தற்போது கொரோனா தொற்றிற்கு தினசரி 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்திலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை, தமிழக அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். அலுவலகத்தில் சுகாதாரத்துறை இயக்குநரகத்தில் இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படத் தொடங்கியுள்ளது. நோய் தொற்று கண்காணிப்பு பிரிவு, ஆய்வகப் பிரிவு, 24 மணிநேர உதவி மையம் ஆகியவை 24 மணிநேரமும் செயல்படவுள்ளது.






















