(Source: ECI/ABP News/ABP Majha)
Tamilnadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் 1,280 பேருக்கு கொரோனா தொற்று.. 19 பேர் உயிரிழப்பு!
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 19 பேர் உயிரிழந்துள்ளனர்
1,38,772 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,280 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 173 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 19 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். நேற்றைவிட உயிரிழப்பு அதிகம். 1453 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம்வரை கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் அது கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது இதுவரை மாவட்டத்தில் 54 ஆயிரத்து 625 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 53 ஆயிரத்து 719 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 20 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா தொற்றால் இன்று உயிரிழப்பு. இதுவரையில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் 666-ஆக உயர்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 7 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32945-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 13 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 32175-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 640 இருக்கிறது. இந்நிலையில் 130 கொரோனா பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#TamilNadu | #COVID19 | 13 Oct
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 13, 2021
• TN - 1,280
• Total Cases - 26,82,137
• Today's Discharged - 1,453
• Today's Deaths - 19
• Today's Tests - 1,38,772
• Chennai - 173#TNCoronaUpdates #COVID19India
#TamilNadu #COVID19 Day Wise Death Cases Details
Total Deaths - 35,833— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 13, 2021
13Oct - 19
12Oct - 18
11Oct - 13
10Oct - 15
09Oct - 14
08Oct - 20
07Oct - 27
06Oct - 25
05Oct - 16
04Oct - 16
03Oct - 23
02Oct - 24
01Oct - 25
30Sep - 28
29Sep - 24
28Sep - 17
30May - 493 (Highest)#TN