மேலும் அறிய

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ 2000 வழங்கும் திட்டம் துவக்கம்

மாவட்டத்தில் உள்ள 728 நியாயவிலைக் கடைகள் மூலம் 3 லட்சத்து 76 ஆயிரத்து 523 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும். ஒரு நாளைக்கு ஒரு கடையில் 200 பேர் வீதம் டோக்கன் வழங்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடித்து இந்நிதி வழங்கப்படுகிறது

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ 2000 வழங்கும் திட்டத்தை பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் 

தமிழகத்தில்  கொரோனா தாக்கம்  அதிகரித்து வருகிறது இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முதலில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார் அதில் முதன்மையான திட்டமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு நிவாரண உதவித் தொகை 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் அதில் முதல் தவணையாக 2000 இந்த மாதம் 15ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தார்

அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் இன்று நியாயவிலைக் கடைகள் மூலமாக கொரோனா நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது  இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ 2000 வழங்கும் திட்டம் திருவாரூர் மாவட்டத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. திருவாரூரில் உள்ள நியாய விலை கடையில் நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை இணை பதிவாளர், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலச்சந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் கலியபெருமாள், திருவாரூர் ஒன்றியக் குழுத்தலைவர் தேவா,  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பூண்டி கலைவாணன் கூறியதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள தமிழக அரசின் சிறப்பு நிவாரண நிதி ரூ 2000 வழங்கும் திட்டம் திருவாரூர் மாவட்டத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 728 நியாயவிலைக் கடைகள் மூலம் 3 லட்சத்து 76 ஆயிரத்து 523 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும். ஒரு நாளைக்கு ஒரு கடையில் 200 பேர் வீதம் டோக்கன் வழங்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடித்து இந்நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதிக்காக முதல் தவணையாக ரூ 75.30 கோடி கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனங்களுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் பேசுகையில் தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள தீவிர நடவடிக்கையின் காரணமாக விரைவில் கொரோனா நோய் குறைவதோடு முடிவுக்கு கொண்டுவரப்படும். திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் தேவைக்கேற்ற ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் துவாக்குடியில் இருந்து ஆக்சிஜன் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. மக்களை நோயின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்கின்ற அடிப்படையில் தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கை முழுவதுமாக கடைபிடித்து தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்வதோடு, பிறருக்கு பரவாமலும் உதவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பூண்டி.கலைவாணன் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் மக்களே அலர்ட்! நாளை காலை முதல் மாலை வரை மின்தடை – பாதிக்கப்படும் பகுதிகள் இதோ!
காஞ்சிபுரம் மக்களே அலர்ட்! நாளை காலை முதல் மாலை வரை மின்தடை – பாதிக்கப்படும் பகுதிகள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Plague Scare In Russia: பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Embed widget