ராணுவ வீரர்களின் உடல்களை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் விபத்து.. உடல்கள் வேறு ஆம்புலன்ஸுக்கு மாற்றம்
நீலகிரி மாவட்டத்தில் உயிரிழந்த 13 ராணுவ வீரர்களின் உடல்களை கொண்டு சென்றபோது ஒரு வாகனம் மட்டும் விபத்தில் சிக்கியது. உடனே மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு, உடல்கள் கொண்டு செல்லப்பட்டன.
இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது மறைவிற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஊட்டி, வெலிங்டனில் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், ஊட்டியில் இருந்து சூலூர் விமானப்படை தளத்திற்கு பிபின்ராவத் உள்பட 13 பேரின் உடல்கள் அமரர் ஊர்தியில் கொண்டு வரப்பட்டது. ஆனால், அப்போது ஒரு ராணுவ வீரரின் உடலை சுமந்து கொண்டு சென்ற அமரர் ஊர்தி ஒன்று சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பில் மோதி விபத்திற்குள்ளாகியது.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்களை எடுத்துச் செல்லும்போது பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது https://t.co/wupaoCQKa2 | #TamilNaduChopperCrash | #BipinRawat | #tnpolice pic.twitter.com/k4gTsDJUga
— ABP Nadu (@abpnadu) December 9, 2021
பின்னர், உடனடியாக மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு வீரரின் உடல், அந்த வாகனத்திற்கு மாற்றப்பட்டு கோயம்புத்தூரில் உள்ள சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சூலூர் விமானப்படை தளம் செல்லும் வழியெங்கிலும் பொதுமக்கள் திரண்டு. அவர்களது உடல்களுக்கு அஞ்சலி செலுத்த காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க..
Next CDS of India: நாட்டின் அடுத்த தலைமைத் தளபதி யார்? - நீடிக்கும் குழப்பம்!
Mi-17 Black Box: விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு...
“ஒரு மருத்துவராக... சிகிச்சை பெற்று வரும் விமானி வருணை சந்தித்தேன்” - ஆளுநர் தமிழிசை பேட்டி!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்