மேலும் அறிய

Mettur Dam: தொடர்ந்து சரிவு... மேட்டூர் அணையின் நீர்வரத்து 16,794 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 19,700 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 19,618 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 18,553 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 16,794 கன அடியாக குறைந்துள்ளது.

Mettur Dam: தொடர்ந்து சரிவு... மேட்டூர் அணையின் நீர்வரத்து 16,794 கன அடியாக குறைந்தது.

நீர்மட்டம்:
அணையின் நீர் மட்டம் 115.93 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 87.12 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 19,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 19,700 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: தொடர்ந்து சரிவு... மேட்டூர் அணையின் நீர்வரத்து 16,794 கன அடியாக குறைந்தது.

கர்நாடக அணைகள்:
கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 1,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதில் அரசு உறுதிபூண்டுள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
Earth To Get New Mini Moon: பூமிக்கு கிடைக்கப்போகும் தற்காலிக நிலவு, சிறுகோள் 2024 PT5  - அதென்ன 2 மாத கால பயணம்..!
Earth To Get New Mini Moon: பூமிக்கு கிடைக்கப்போகும் தற்காலிக நிலவு, சிறுகோள் 2024 PT5 - அதென்ன 2 மாத கால பயணம்..!
Breaking News LIVE 15 Sep: சென்னை பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்
Breaking News LIVE 15 Sep: சென்னை பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்
Neeraj Chopra: 0.01 மீட்டர் தான் வித்தியாசம் - தங்கப் பதக்கத்தை இழந்த நீரஜ் சோப்ரா - டைமண்ட் லீக்கில் நடந்தது என்ன?
Neeraj Chopra: 0.01 மீட்டர் தான் வித்தியாசம் - தங்கப் பதக்கத்தை இழந்த நீரஜ் சோப்ரா - டைமண்ட் லீக்கில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thirumavalavan X Post |ஆட்சியில் பங்கு.! திமுகவுக்கு திருமா செக்! 2026-ல் கூட்டணி ஆட்சியா?Singer Mano sons issue | பதுங்கிய மனோ மகன்கள்POLICE-க்கு கிடைத்த சிக்னல் நடந்தது என்ன?Priyanka Gandhi On Annapoorna | ”கேள்வியே கேட்கக் கூடாதா?பாஜகவின் தந்திரமா நிர்மலா?”சீறும் பிரியங்காElephant Subbulakshmi | உயிரிழந்த குன்றக்குடி யானை! கதறி அழுத மக்கள்! சுப்புலட்சுமியின் இறுதி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதில் அரசு உறுதிபூண்டுள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
Earth To Get New Mini Moon: பூமிக்கு கிடைக்கப்போகும் தற்காலிக நிலவு, சிறுகோள் 2024 PT5  - அதென்ன 2 மாத கால பயணம்..!
Earth To Get New Mini Moon: பூமிக்கு கிடைக்கப்போகும் தற்காலிக நிலவு, சிறுகோள் 2024 PT5 - அதென்ன 2 மாத கால பயணம்..!
Breaking News LIVE 15 Sep: சென்னை பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்
Breaking News LIVE 15 Sep: சென்னை பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்
Neeraj Chopra: 0.01 மீட்டர் தான் வித்தியாசம் - தங்கப் பதக்கத்தை இழந்த நீரஜ் சோப்ரா - டைமண்ட் லீக்கில் நடந்தது என்ன?
Neeraj Chopra: 0.01 மீட்டர் தான் வித்தியாசம் - தங்கப் பதக்கத்தை இழந்த நீரஜ் சோப்ரா - டைமண்ட் லீக்கில் நடந்தது என்ன?
Taj Mahal: உலக அதிசயத்திற்கு வந்த சோதனை - தாஜ்மஹாலின் குவிமாடம் சேதம்? வெள்ளத்தில் மூழ்கிய தோட்டம் - நடந்தது என்ன?
Taj Mahal: உலக அதிசயத்திற்கு வந்த சோதனை - தாஜ்மஹாலின் குவிமாடம் சேதம்? வெள்ளத்தில் மூழ்கிய தோட்டம் - நடந்தது என்ன?
IND vs BAN 1st Test:வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்.. குல்தீப் யாதவ் - அக்சர் படேலுக்கு இடம் கிடைக்குமா? ரோஹித்தின் ப்ளான் என்ன?
IND vs BAN 1st Test:வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்.. குல்தீப் யாதவ் - அக்சர் படேலுக்கு இடம் கிடைக்குமா? ரோஹித்தின் ப்ளான் என்ன?
அலர்ட் மக்களே ! விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின் தடை... எந்தெந்த பகுதிகள் தெரியுமா ?
அலர்ட் மக்களே ! விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின் தடை... எந்தெந்த பகுதிகள் தெரியுமா ?
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. பிரதீப் ஜான் அப்டேட் என்ன தெரியுமா?
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. பிரதீப் ஜான் அப்டேட் என்ன தெரியுமா?
Embed widget