தொடர்ச்சியாக கருவுற்றால் பெண்களின் உயிருக்கு ஆபத்து.. கருத்தடை விழிப்புணர்வு முகாமில் ஆட்சியர் தகவல்!
கரூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சித் தலைவர்பிரபுசங்கர் தலைமையில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

நான்கு பெண் குழந்தைக்கு பிறகு ஐந்தாவதாக ஆண் குழந்தை வேண்டுமென்று தொடர்ச்சியாக கருவூற்ற காரணத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு தாய்மார் உயிர் இழக்க நேரிட்டது ஆகவே, இரண்டு குழந்தைகள் பின் கருவூற்ற தாய்மார்களை கூடுதல் கவனத்துடன் கவனித்து அவர்களுக்கு கருத்தடை செய்வதற்கு ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர்பிரபுசங்கர் தலைமையில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் நடைபெறும் சிசு மரணம் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு இறப்பிற்கான காரணங்களை ஆய்வுசெய்து அவற்றில் சிசு இறப்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும், இதேபோல் குழந்தை மரணம் குறித்து ஆய்வு செய்து ஒவ்வொரு குழந்தை பிறந்த பின்பும், பிரசவ காலபின் கவனிப்பு 42 நாட்கள் வரை கட்டாயம் கிராம சுகாதார செவிலியர்களால் செய்யப்பட வேண்டும். மேலும், ஐந்தாவதாக ஆண் குழந்தை வேண்டுமென்று தொடர்ச்சியாக கருவூற்ற காரணத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு தாய்மார் உயிர் இழக்க நேரிட்டது ஆகவே, இரண்டு குழந்தைகள் பின் கருவூற்ற தாய்மார்களை கூடுதல் கவனத்துடன் கவனித்து அவர்களுக்கு கருத்தடை செய்வதற்கு ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படும் நோய்கள் கண்டறிதல் பற்றி ஆய்வு செய்து பிறவி காது கேளாமை போன்ற நோய்கள் கண்டறிதல் துரிதமாக கண்டறிய வேண்டும்.

இரண்டுக்கும் மேற்பட்ட நலமுடன் வாழக்கூடிய குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் மற்றும் தந்தையர்களுக்கு ஒரு சிறப்பு ஆய்வுக்கூட்டம் நடத்தி அதில் குடும்ப நல அறுவை சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என மருத்துவ அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அறிவுறுத்தினார்கள்..

இக்கூட்டத்தில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.தமோதரன், இணை இயக்குநர்(நலப்பணிகள்) மரு.ரமாமணி, துணை இயக்குநர்கள். (சுகாதாரப்பணிகள்) மரு.சந்தோஷ்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர். மரு.ராஜா, மற்றும் மருத்துவர் கலந்து கொண்டனர்.
Join Us on Telegram: https://t.me/abpdesamofficial





















