மேலும் அறிய

காங்கிரஸ் சட்டமன்ற கொறடாவாக விஜயதாரணி தேர்வு..!

தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடாவாக விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதாரணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டது. அவற்றில் 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், அந்த கட்சியின் சட்டசபை தலைவராக நீண்ட  நாட்களுக்கு பிறகு, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. கு.செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். அவருடன் கட்சியின் சட்டப்பேரவைத் துணைத்தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், கட்சியின் பிற பொறுப்புகளுக்கான நபர்கள் நியமிக்கப்படாமலே இருந்தனர். இந்த நிலையில், தமிழக சட்டசபைக்கான காங்கிரஸ் கட்சியின் மற்ற நிர்வாகிகளை அந்த கட்சியின் தலைமை நியமித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், அவர் “தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் – கு.செல்வப்பெருந்தகை, துணைத்தலைவர் –எஸ்.ராஜேஷ்குமார், சட்டசபை காங்கிரஸ் கொறடா- எஸ்.விஜயதாரணி, துணை கொறடா – ஜெ.எம்.ஹசன் மவுலானா, செயலாளர் – ஆர்.எம். கருமாணிக்கம். பொருளாளர் – ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்” காங்கிரஸ் சட்டமன்ற கொறடாவாக விஜயதாரணி தேர்வு..!

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. வாக தேர்வாகியுள்ள விஜயதாரணி தற்போது சட்டமன்ற காங்கிரஸ் கொறடாவாக நியமிக்கப்பட்டு இருப்பதற்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும்  வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

51 வயதான விஜயதாரணி சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தவர். இவர் காங்கிரஸ் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும் எதிர்பார்ப்புகள் நிலவியது. ஆனால், அந்த பொறுப்பு செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது சட்டசபை காங்கிரஸ் கொறடாவாக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜயதாரணி கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : சென்னைக்குள் இ பதிவு இல்லாமல் பயணிக்கலாம் : தெரிந்துகொள்ளவேண்டியவை என்ன?

தலைப்பு செய்திகள்

Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (16-10-2026) எங்கெல்லாம் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (16-10-2026) எங்கெல்லாம் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
"சுறா படத்துல வர்ற மாதிரி நீந்தவா சொன்னோம்?" - விஜய்யை வச்சு செய்த எடப்பாடி பழனிசாமி
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Embed widget