மேலும் அறிய

நவம்பர் 8... மறக்க முடியுமா ? பாயிண்டுகளை அடுக்கிய செல்வப் பெருந்தகை

" பண மதிப்பு இழப்பு தொடர்பாக செல்வப் பெருந்தகை காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார் "

காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று, புழக்கத்தில் இருந்த ரூபாய் 500, ரூபாய் 1000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்து மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்தது இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாளாகும். மோடி உருவாக்கிய பணமதிப்பு நீக்க பேரழிவு என்பது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய மோசடியாகும். கருப்புப் பணம், கள்ளப் பணம் ஒழிக்கப்படும் என்றார்கள். ஆனால் அவர்கள் கூறியபடி ஒன்றும் நடக்கவில்லை. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 15.44 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகளில் 15.31 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் அதாவது, 99.9 சதவிகிதம் வங்கிகளுக்கு திரும்ப வந்து சேர்ந்து விட்டன. அப்படியானால் கள்ளப் பணம் எங்கே ? கருப்பு பணம் எங்கே ? என 8 ஆண்டுகள் கழித்து மோடி ஆட்சியை நோக்கி பொதுமக்கள் கேள்வி கேட்க வேண்டிய நாள் நவம்பர் 8.

2000 ரூபாய் நோட்டுகள்

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு, புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ஆன செலவு ரூபாய் 12,677 கோடி. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு தான் பயன்பட்டது என்று நாம் கூறவில்லை. உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்தினா ஐதராபாத் கருத்தரங்கில் உரையாற்றும் போது, இந்த கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதனால் நாட்டு மக்களுக்கு கடுமையான பாதிப்புகள் தான் ஏற்பட்டதே தவிர, எந்த பலனும் ஏற்படவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு யாரையும் கலந்து பேசாமல் தன்னிச்சையாக எடுத்ததனால், இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது என்றும் அவர் கூறியிருக்கிறார். 

தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்

2015-16 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8.01 சதவிகிதத்திலிருந்து 2017-18 ஆம் ஆண்டில் 6.5 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்தது. 1.6 சதவிகித வீழ்ச்சியினால் ஏற்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி இழப்பு ரூபாய் 2.25 லட்சம் கோடி. இதைத் தவிர வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க முயன்றவர்களில் 140 பேர் இறந்திருக்கிறார்கள். 35 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் 50 சதவிகிதம் நசிந்து லட்சக்கணக்கான அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். 

கருப்பு பணம், வெள்ளை பணம் 

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட முதல் 5 நாட்களில், அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் ரூபாய் 745 கோடி மதிப்புள்ள பழைய நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டன. இந்த வங்கியின் இயக்குநராக இருந்தவர் பா.ஜ.க. தேசியத் தலைவரான அமித்ஷா. குஜராத்தில் மட்டும் பா.ஜ.க. தலைவர்களும், அமைச்சர்களும் இயக்குநர்களாக இருந்த 11 கூட்டுறவு வங்கிகளில் சுமார் 3118 கோடி ரூபாய் அளவிலான பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாடு முழுவதும் கருப்பு பணம் வெள்ளை பணம் ஆவதற்கு மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பெருமளவில் உதவி செய்திருக்கிறது. 

பொருளாதார பேரழிவு ‌

எனவே, பிரதமர் மோடி அறிவித்தபடி கருப்பு பணமோ, கள்ள பணமோ பயங்கரவாத நடவடிக்கைகளோ குறைந்தபாடில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது வரலாறு காணாத பொருளாதார பேரழிவாகவும், மக்களின் மீது தொடுக்கப்பட்ட கடுமையான தாக்குதலாகவும் தான் அமைந்து விட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த நவம்பர் 8 ஆம் நாள் மக்கள் சந்தித்த துன்பங்கள், துயரங்கள் குறித்து பிரதமர் மோடி என்றைக்குமே கவலைப்பட்டதாக தெரியவில்லை. அதை மூடி மறைப்பதற்கு வகுப்புவாத அரசியலை புகுத்தி, மக்களை பிளவுபடுத்தி வாக்கு வங்கியை விரிவுபடுத்தி ஆட்சியை கைப்பற்றுகிற உத்தியின் மூலம் தான், 2019 மக்களவை தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற முடிந்தது. ஆனால், 2024 மக்களவை தேர்தலில் மோடியின் உத்தி எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. மாறாக, தனித்துவ ஆட்சிக்கு பதிலாக மோடியின் தலைமையில் கூட்டணி ஆட்சி தான் நடைபெறுகிறது என்றாலும், மக்களை பிளவுபடுத்துகிற அரசியலும், மக்கள் விரோத நடவடிக்கைகளும் தான் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகளை மக்களவை எதிர்கட்சித் தலைவராக இருக்கிற திரு. ராகுல்காந்தி அவர்கள் மக்கள் மன்றத்தில் பரப்புரை செய்து மக்களின் பேராதரவை பெற்று வருகிறார். இதன்மூலம் புதிய நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டு வருகிறது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
Embed widget