மேலும் அறிய

Smart City scam : ஸ்மார்ட்டாக நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல்... அக்கு வேறு ஆணி வேறாய் பிரித்து அறிக்கை தாக்கல் செய்த டேவிதர்!

ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக 200 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை முதலமைச்சரிடம் ஆணைய தலைவர் டேவிதர் தாக்கல் செய்துள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக 200 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை முதலமைச்சரிடம் ஆணைய தலைவர் டேவிதர் தாக்கல் செய்துள்ளார். இதில் முக்கியமாக டெண்டர் முறைகேடு குறித்து விரிவாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதர் தலைமையில் கடந்த மே மாதம் குழு அமைக்கப்பட்டு, இந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. 

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சரிடம் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதர் தாக்கல் செய்துள்ளார். அதில், “25.06.2015இல் தொடங்கிய ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் முறைகேடு நடந்ததாகவும், தேர்வு செய்யப்பட்ட நகரம் ஒன்றிற்கு ரூ 1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் ஊழல் கண்டறியப்பட்டது என்று தெரிவித்துள்ளார். 

சென்னை, திருப்பூர், சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், தஞ்சை, கோவை, ஈரோடு, மதுரை, தூத்துக்குடி ஆகிய 11 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொட்டித் தீர்த்த மழையால் தியாகராய நகர் ஸ்தம்பித்தது. சரியான முறையில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி நின்றது. அதை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்டார்ட் சிட்டி திட்டத்தில் நிறைய முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதை விசாரிக்க ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து, ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையம் தமிழக முழுவதும் நேரடியாக சென்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்தார்கள் உள்ளிட்டோர்களுடன் ஆய்வு செய்தது. இதன் அறிக்கையை தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் சந்தித்து தாக்கல் செய்துள்ளது. இதில் தமிழக முழுவதும் நடைபெற்று வரும் பணிகளில் தொய்வு, முறைகேடு, யாருக்கெல்லாம் தொடர்பு, எங்கெல்லாம் இணைப்பு பணிகள் முழுமையாக முடியவில்லை என்பது குறித்து முதலமைச்சருடன் விரிவாக எடுத்துரைத்தார். 200 பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் முக்கியமாக டெண்டர் முறைகேடு குறித்து விரிவாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kallakurichi Liquor Death: அரசுக்கு எதிராக குரல்.. ஆறுதல் தெரிவிக்க கள்ளக்குறிச்சி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்..!
அரசுக்கு எதிராக குரல்.. ஆறுதல் தெரிவிக்க கள்ளக்குறிச்சி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்..!
Kallakurichi Liquor Death:”தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்” கள்ளச்சாராய உயிரிழப்பால் ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம்!
”தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்” கள்ளச்சாராய உயிரிழப்பால் ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம்!
Breaking News LIVE: கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 42-ஆக உயர்வு
Breaking News LIVE: கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 42-ஆக உயர்வு
"1000 டாஸ்மாக் கடைகளை நாளையே மூட வேண்டும்" : அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

MK Stalin on Kallasarayam  : ”விஷச்சாராயம் எப்படி வந்துச்சி..களத்துக்கு போ உதய்” ஆணையிட்ட ஸ்டாலின்Vijay Vs DMK | ”திமுக அரசின் அலட்சியம்”பொங்கி எழுந்த விஜய்!கள்ளச்சாரய விவகாரம்Kallakurichi Kalla Sarayam | DGP-யை அழைத்த ஸ்டாலின் SP-க்களுக்கு பறந்த ORDER!Trichy Surya | தமிழிசையை சீண்டிய திருச்சி சூர்யா? தூக்கி வீசிய பாஜக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kallakurichi Liquor Death: அரசுக்கு எதிராக குரல்.. ஆறுதல் தெரிவிக்க கள்ளக்குறிச்சி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்..!
அரசுக்கு எதிராக குரல்.. ஆறுதல் தெரிவிக்க கள்ளக்குறிச்சி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்..!
Kallakurichi Liquor Death:”தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்” கள்ளச்சாராய உயிரிழப்பால் ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம்!
”தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்” கள்ளச்சாராய உயிரிழப்பால் ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம்!
Breaking News LIVE: கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 42-ஆக உயர்வு
Breaking News LIVE: கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 42-ஆக உயர்வு
"1000 டாஸ்மாக் கடைகளை நாளையே மூட வேண்டும்" : அண்ணாமலை
Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் பார்வை பறிபோனதா? -  சேலம் அரசு மருத்துவமனை விளக்கம்
கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் பார்வை பறிபோனதா? - சேலம் அரசு மருத்துவமனை விளக்கம்
Kallakurichi Liquor Death: கள்ளச்சாராயத்தால் பலியானோர் எண்ணிக்கை 42-ஆக உயர்வு
கள்ளச்சாராயத்தால் பலியானோர் எண்ணிக்கை 42-ஆக உயர்வு
Kallakurichi Liquor Death: கள்ளச்சாராய மரணங்கள் : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியஅமைச்சர் உதயநிதி
Kallakurichi Liquor Death: கள்ளச்சாராய மரணங்கள் : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியஅமைச்சர் உதயநிதி
Kamal Haasan:
Kamal Haasan: "போதைக்கு எதிரான போரில் ஈடுபட வேண்டிய தருணம்" கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கமல் இரங்கல்
Embed widget