![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
‘நமக்கெல்லாம் கொரோனா வராது என்று நினைக்காதீர்கள்’ - உறவினரை இழந்த பிரபல நடிகர் வேண்டுகோள்..
‘நமக்கெல்லாம் கொரோனா வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம். நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும். முக கவசம் அணிந்து கொள்ளுங்கள்’ என்று நடிகர் பாலசரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
![‘நமக்கெல்லாம் கொரோனா வராது என்று நினைக்காதீர்கள்’ - உறவினரை இழந்த பிரபல நடிகர் வேண்டுகோள்.. Comedian Bala Saravanan's younger sister's husband dies of corona infection ‘நமக்கெல்லாம் கொரோனா வராது என்று நினைக்காதீர்கள்’ - உறவினரை இழந்த பிரபல நடிகர் வேண்டுகோள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/07/a3f44039394fd688fb5c0f5a269eab23_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நகைச்சுவை நடிகர் பால சரவணனின் தங்கை கணவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதிப்பு திரைப்பிரலங்கள் பலர் பாதிக்கப்படுவதும், அதில் சிலர் உயிரிழந்து வருவதும் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், நடிகர் விவேக், இயக்குநர் தாமிரா, இயக்குநர் கே.வி.ஆனந்த், மூத்த நடிகர் செல்லதுரை, நடிகர் டி.கே.எஸ் நடராஜன், நடிகர் பாண்டு, பாடகர் கோமகன் ஆகியோரை திரையுலகம் இழந்துள்ளது.
இந்நிலையில், நகைச்சுவை நடிகர் பால சரவணனின் தங்கை கணவர் நேற்று கொரோனா தொற்றுக்கு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை பால சரவணன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
அன்பு நண்பர்களே...இன்று எனது தங்கையின் கணவர் கொரோனா காரணமாக இறந்துவிட்டார்...32வயது...
— Bala saravanan actor (@Bala_actor) May 6, 2021
தயவு கூர்ந்து மிக கவணமாக இருக்கவும்...நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம்...நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும்...முக கவசம் அணிவீ்ர்...plss🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
‘அன்பு நண்பர்களே எனது தங்கையின் கணவர் கொரோனா தொற்று காரணமாக இறந்துவிட்டார். அவருக்கு 32 வயதுதான் ஆகிறது. தயவுகூர்ந்து மிக கவனமாக இருங்கள். நமக்கெல்லாம் கொரோனா வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம். நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும். முக கவசம் அணிந்து கொள்ளுங்கள்’ என பால சரவணன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)