CM Vijay: பறிபோகிறதா ரவிசங்கரின் பதவி? புதிய துணை சபாநாயகர் இவரா? விஜய் முடிவு என்ன?
துறையூர் உறுப்பினர் ரவிசங்கர் தொகுதிவாசியை தாக்கிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அவரது துணை சபாநாயகர் பதவி பறிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் சட்டம் ஒழுங்கு, விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சியினர் முன்வைத்து வருகின்றனர்.
விஜய்க்கு தலைவலி:
தனிப்பெரும்பான்மை இல்லாமல் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் ஒருபக்கம், ஆட்சி கவிழ்ப்பு சதி ஒரு பக்கம் என்று விஜய் ஆட்சியை நடத்தி வருகிறார். இந்த நிலையில், தவெக எம்எல்ஏ-க்கள் செயல்பாடே விஜய்க்கு பெரும் தலைவலியாக உருவெடுத்து வருகிறது.
ரவிசங்கர் பதவி பறிப்பா?
துறையூரில் தொகுதிவாசி ஒருவரை அந்த தொகுதியின் உறுப்பினரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான ரவிசங்கர் தகாத வார்த்தையில் திட்டி, சரமாரியாக தாக்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் ரவிசங்கருடன் இணைந்து இது வெறும் வதந்தி என்று வீடியோ வெளியிட்ட நிலையில், சிறிது நேரம் கழித்து தன்னை மிரட்டி வீடியோ வெளியிட வைத்ததாக ரவிசங்கர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த விவகாரத்தில் ரவிசங்கருக்கு எதிராக கடும் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், ரவிசங்கரிடம் இருந்து துணை சபாநாயகர் பதவியை பறிப்பதற்கு முதலமைச்சர் விஜய் கட்சித் தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
மற்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை:
எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதற்கு இதுவே சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்று விஜய்யும் கருதுவதாக கூறப்படுகிறது. மேலும், தனது கட்சி உறுப்பினர்கள் சிலர் செய்யும் செயல்பாடுகளால் கட்சிக்கு அவப்பெயர் வருவதை உணராமல் இருப்பதை நிறுத்துவதற்கும், தவறு செய்தால் உடனடியாக கட்சி நடவடிக்கை என்று எச்சரிக்கை செய்வதற்கும் இந்த நடவடிக்கை மிகவும் சரியானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
அவரிடம் இருந்து துணை சபாநாயகர் பதவி பறிக்கப்பட்டால் அந்த பொறுப்பு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவிற்கு வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் தவெக அரசின் தற்காலிக சபாநாயகராக பொறுப்பு வகித்தவரும் சுப்பையாவே ஆவார். இதுதொடர்பாக கட்சித் தலைமை நிர்வாகிகளிடம் விஜய் ஆலோசனை நடத்தி வருகின்றார்.
விரைவில் அறிவிப்பு:
இந்த முடிவு ஏறத்தாழ உறுதி செய்யப்படும் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், விரைவில் துணை சபாநாயகர் பதவியில் இருந்து ரவிசங்கர் நீக்கப்பட்டு கருப்பையா துணை சபாநாயகராக அறிவிக்கப்படுவார் என்றே கருதப்படுகிறது. மாமல்லபுரத்தில் எம்எல்ஏ-க்களுடன் விஜய் நடத்தும் கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகும் என்று கருதப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















