மேலும் அறிய

CM Stalin Letter to PM :கொப்பரைத் தேங்காய் கொள்முதல் உச்ச வரம்பை உயர்த்த வேண்டும்.. முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம்

கொப்பரைத் தேங்காய் கொள்முதல் உச்ச வரம்பை உயர்த்தக்கோரி முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தென்னை விவசாயிகளின் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.  உச்சவரம்பை 20 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகவும், கொள்முதல் இலக்கை 90 ஆயிரம் மெட்ரிக் டன்னாகவும் உயர்த்த வேண்டும் என்று கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழ்நாட்டில் தென்னை விவசாயிகளின் நலன் காக்க, நடப்புப் பருவத்தில் கொப்பரைக் கொள்முதல் உச்சவரம்பை உயர்த்திடவும், தமிழ்நாட்டிற்கான கொள்முதல் இலக்கை உயர்த்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

”தமிழ்நாட்டில் கொப்பரைக் கொள்முதல் தொடர்பான ஒரு முக்கியமான பிரச்சினை குறித்து பிரதமரின் கவனத்தை ஈர்க்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மத்திய அரசின் ஆதரவு விலை திட்டத்தின்கீழ், கொப்பரை கொள்முதல் செய்யும் இலக்கை அதிகரிக்க மாநிலம் முழுவதும் உள்ள தென்னை விவசாயிகளிடமிருந்து எண்ணற்ற கோரிக்கைகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஆதரவு விலை திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யவும், சந்தை விலையை நிலைப்படுத்தவும், உளுந்து, பாசிப்பயறு மற்றும் கொப்பரை போன்ற பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்றும், தமிழ்நாட்டில், இந்தக் கொள்முதல் மத்திய அரசின் அமைப்பான, தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் லிமிடெட் (National Agricultural Co-operative Marketing Federation of India Ltd.) மூலம் செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் 4.46 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 53,518 இலட்சம் எண்ணெய் வித்துக்களும், ஒரு ஹெக்டேருக்கு 11,692 எண்ணெய் வித்துக்களும் உற்பத்தி செய்யப்பட்டு, பரப்பளவிலும், உற்பத்தியிலும் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும், தென்னை உற்பத்தியில் தேசிய அளவில் இரண்டாவது இடத்திலும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நடப்பாண்டில் கொப்பரை கொள்முதல் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் 2019 -ஆம் ஆண்டில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் கொப்பரை கொள்முதல் தொடங்கப்பட்டாலும், சந்தை விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிகமாக இருந்ததால், தொடக்க காலங்களில் கொள்முதல் குறைவாகவே இருந்தது என்றும், 2022 முதல், தேங்காய் உற்பத்தி அதிகரித்ததால் இந்த நிலை முழுவதுமாக மாறியது என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் , இதன் விளைவாக, தேங்காய் சந்தை விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500-லிருந்து ரூ.1,500-ஆகவும், கொப்பரையின் சந்தை விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.11,500-லிருந்து ரூ.8,100-ஆகக் குறைந்ததனால், 2022 மற்றும் நடப்பாண்டில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் கொப்பரை கொள்முதல் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தென்னை விவசாயிகள் கோரிக்கை 

ஆதரவு விலை திட்டத்தின்கீழ், நடப்பாண்டில், 2023 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்திற்குள், 56,000 மெட்ரிக் டன் என்ற இலக்கில் 47,513 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர் , விவசாயிகளிடம் இன்னும் கொப்பரை கையிருப்பு அதிகமாக இருப்பதாலும், சந்தை விலை தொடர்ந்து குறைவாக இருப்பதாலும், ஆதரவு விலைத் திட்டத்தின்கீழ் கொள்முதல் செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கொப்பரையின் அளவை அதிகரிக்குமாறு மாநிலம் முழுவதும் உள்ள தென்னை விவசாயிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கொள்முதல் இலக்கை உயர்த்த வேண்டும்

எனவே, நடப்பு பருவத்தில் செப்டம்பர் 2023 வரை கொப்பரை கொள்முதல் செய்வதற்கான உச்சவரம்பை, தற்போதுள்ள 25 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தவும், தமிழகத்திற்கான கொள்முதல் இலக்கை 56,000 மெட்ரிக் டன்னில் இருந்து 90,000 மெட்ரிக் டன்னாக உயர்த்தவும், தொடர்புடைய அமைச்சகத்திற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொண்டுள்ள  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இது கொப்பரையின் சந்தை விலையை நிலைப்படுத்த உதவுவதோடு, மாநிலத்தில் உள்ள தென்னை விவசாயிகளுக்கும் நல்ல பயனளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகமா

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.