மேலும் அறிய

MK Stalin Singapore Visit: சிங்கப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்னென்ன...?

MK Stalin: சிங்கப்பூர் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்நாட்டு தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

சிங்கப்பூர் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்நாட்டு தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் பல்வேறு துறைகளில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு - சிங்கப்பூர் இடையே கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும், சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்த்தித்து உரையாடினார்.

முதலமைச்சர் சிங்கப்பூர் பயணம்:

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றும் விதமாக, வரும் 2030-31ம் நிதி ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மேம்படுத்துவதை இலக்காக கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த இலக்கை அடைய ரூ.23 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்ப்பதுடன், 46 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்க வேண்டும்.

அதன் ஒரு அங்கமாக அடுத்த ஆண்டு, தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதையொட்டி, தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவரவும், வரும் 2024 ஜனவரியில் சென்னையில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறை பயணமாக, சிங்கப்பூருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார்.

MK Stalin Singapore Visit: சிங்கப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்;  முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்னென்ன...?

தொழிலதிபர்களை சந்தித்த ஸ்டாலின்:

இதையடுத்து சிங்கப்பூர் பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக, செம்ப்கார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் சேர்மேன் ஆன, கிம்யின் வாங்கை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தார். அதை தொடர்ந்து, கேபிட்டாலேண்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சஞ்சீவ் தாஸ்குப்தாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது தமிழகத்தில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள், முதலீட்டாளர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் உதவிகள் ஆகியவற்றை எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். முன்னதாக, டமாசெக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தில்ஹான் பிள்ளை சந்திரசேகராவையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புகளின் போது தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட தமிழக அரசு அதிகாரிகளும் முதலமைச்சருடன் இருந்தனர்.

MK Stalin Singapore Visit: சிங்கப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்;  முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்னென்ன...?

புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விவரங்கள்

1) தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த Singapore Indian Chamber of Commerce and Industries (SICCI நிறுவனத்திற்கும் இடையே, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, பல்கலைக்கழக ஒத்துழைப்பு, அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, தமிழ்நாட்டில் தொழில்துறைகளின் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு ஆதரவு போன்றவற்றில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

2) சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் (Singapore India Partnership Office SIPO) மற்றும் தமிழ்நாடு அரசின் சிப்காட் - நிறுனத்திற்கும் இடையே, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சியில் ஒத்துழைப்பை ஏற்படுத்துதல் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

3) சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகத்திற்கும் (Singapore India Partnership Office - SIPO), தமிழ்நாட்டின் FameTN மற்றும் TANSIM நிறுவனங்களும் இடையே தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப தொடர்  கல்விக்கான திறன் மேம்பாடு, StartupTN மூலம் ஸ்டார்ட்-அப் பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு கூட்டாண்மைகளை எளிதாக்குதல் போன்றவற்றிற்கான பரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

4) தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த HI-P International Pvt. Ltd. நிறுவனத்திற்கும் இடையே 312 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மின்னணு பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

5) தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், Singapore University of Technoloxy & Design (SUTD) நிறுவனத்திற்கும் இடையே, தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பில் எதிர்கால மற்றும் தொழில்துறைக்கு தேவையான பாடத்திட்டம் மற்றும் பாட மேம்பாட்டிற்கான அறிவுப் பங்குதாரராக நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

6) தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும். சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ITE Education ServiceS நிறுவனத்திற்கும் இடையே, தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி துறையில் நீண்ட கால கூட்டாண்மையை நிறுவுதல். தமிழ்நாட்டில் தொழிற்சாலை திறன் பள்ளிகளை அமைத்தல் மற்றும் மேலாண்மை செய்தல் போன்றவற்றிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த முதலீட்டாளர் மாநாட்டில்,  சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்  எஸ். ஈஸ்வரன் பேசுகையில்,” , தொழில் 4.0 நோக்கிய பயணத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க எங்கள் இரு அரசுகளும் இணைந்து செயல்படுகின்றன. டிஜிட்டல் மயமாக்கல், ஆட்டோமேஷன், டேட்டா அனலிட்டிக்ஸ் மற்றும் இ-காமர்ஸ் ஆகியவை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் செலவுகளைக் குறைக்கவும், உற்பத்தி அளவினை அதிகரிக்கவும். புதிய சந்தைகளை உருயாக்கவும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உதவும்.” என்று தெரிவித்தார்.

இந்த முதலீட்டாளர் மாநாட்டில் 250-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget