(Source: ECI/ABP News/ABP Majha)
CM Stalin: 8 நாள் பயணமாக ஸ்பெயின் புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின்; எதற்கு தெரியுமா?
வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் 8 நாள் பயணமாக ஸ்பெயின் புறப்பட்டார்.
வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் 8 நாள் பயணமாக ஸ்பெயின் புறப்பட்டுள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பினை நடத்தினார். அதில் பேசிய அவர், ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை ஏற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றிகரமாக அமைந்தது. தற்பொழுது நான் ஸ்பெயின் செல்கிறேன் வருகின்ற ஏழாம் தேதி நான் மீண்டும் தமிழ்நாடு திரும்புவேன். அண்மையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக முடிந்தது.
என்னுடைய கடந்த கால வெளிநாட்டு பயணிகளை பொறுத்தவரை, கடந்த 2022 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்று இருந்தேன். அந்தப் பயணத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கக்கூடிய 6100 கோடி முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அதே போன்று 2023 ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்ற பொழுது 2000 திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கக்கூடிய, 1342 முதலீடு கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த, முதலீட்டாளர்கள் வணிக அமைப்புகள் தொழில் முனைவோர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் நிலவுகிற சாதகமான சூழல் பற்றியும், தமிழ்நாட்டின் கட்டமைப்பு வசதிகள், மனிதவள ஆற்றல் போன்ற சிறப்பு அம்சங்களையும் எடுத்துக் கூறி இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு தான் சிறந்த இடம் என எடுத்துக் கூறி, அந்த நாட்டு முதலீட்டாளர்களை எடுத்துரைக்க உள்ளேன்.
இந்தப் பயணத்தின் பொழுது, ரோ.கா, கேஸ்டம் உட்பட சில பெரும் தொழில் நிறுவனங்களிடமும், இன்வெஸ்ட் ஸ்பெயின் என்ற முதலீட்டு நிறுவனத்துடன் நேரடி பேச்சு வார்த்தைகளில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த பயணத்தின் மூலமாக ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை ஈர்த்து, அந்த நாடுகளில் இருந்தும் முதலீடுகளை பெருமளவு ஈர்க்க முடியும் என நம்புகிறேன். எனவே உங்கள் அனைவருடைய வாழ்த்துகளுடன் இந்த பயணம் வெற்றி பெற வேண்டுமென நினைக்கின்றேன். எவ்வளவு முதலீடு என்பதை தமிழ்நாட்டிற்கு திரும்பி வரும்போது தெரிவிப்பதாகவும் பேசினார்.
ஸ்பெயினுக்கு முதலீட்டுகளை ஈர்க்கச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை வழியனுப்பி வைக்க திமுக அமைச்சர்களும், திமுக மக்களவை உறுப்பினர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் ஆகியோர் விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.