CM Stalin: பொதுத்துறை நிறுவனங்களை கண்காணிக்க வலைதளம்.. தொடங்கிவைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
நிதி துறை சார்பில் புதிய வலைதளத்தை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, நிதித்துறை சார்பிலான புதிய வலைதளத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
புதிய வலைதளம் தொடக்கம்:
நிறுவனங்களின் விதிகளை பின்பற்றுதல் மற்றும் நிதி கண்காணிப்பு முறைமை என்கிற www.ccfms.tn.gov.in என்ற இணையதளத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி இன்று வைத்தார். வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதி வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து, எஸ்.சி, எஸ்.டி-க்கான ஸ்டார்ட் அப் நிதி திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு அனுமதி ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு நிதித்துறை சார்பில் புதிய வலைதளம் தொடக்கம்
— Vinodth Vj... (@VinodthVj) January 27, 2023
தலைமை செயலகத்தில் முதலமைச்சர் @mkstalin தொடங்கி வைத்தார்
மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க புதிய வலைதளம் https://t.co/SNvWk0LQwQ தொடங்கி வைப்பு…@OfficeOfPTR @thamoanbarasan pic.twitter.com/GcOxI2Cjbv
அப்போது, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.