![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kumari Ananthan : குமரி அனந்தனுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு..
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தமிழக அரசு சார்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
![Kumari Ananthan : குமரி அனந்தனுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு.. CM Stalin hands over house allotment order to veteran Congress leader Kumari Ananthan Kumari Ananthan : குமரி அனந்தனுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/27/792a038fa0489900053d2edff719f0b11664279858663102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், காங்கிரஸ் தலைவருமானவர் குமரி அனந்தன். எம்.எல்.ஏ.,. எம்.பி.யாக பொறுப்பு வகித்த இவர் காமராஜருடன் நெருங்கி பழகியவர். இவர் சமீபத்தில் தனக்கு வீடு ஒன்று ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு அவருக்கு சென்னை, அண்ணாநகரில் வீடு ஒதுக்கி உத்தரவிட்டது. அண்ணாநகர் பகுதியில் தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் வரும் உயர் வருவாய் குடியிருப்பில் வீடு வழங்கி உத்தரவிடப்பட்டது. அதற்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குமரி அனந்தனிடம் வழங்கினார். சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் வீடு ஒதுக்கியதற்கான ஆணையை குமரி அனந்தனிடம் வழங்கினார்.
பெருந்தலைவர் காமராசரின் அருமந்த சீடர், இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தன் அவர்களுக்கு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய் குடியிருப்பில் வீடு வழங்கி, அதற்கான ஆணையினை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கினார். pic.twitter.com/znaMEbT5vR
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 27, 2022
குமரி அனந்தன் தமிழக சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் சார்பில் நான்கு முறையும், நாடாளுமன்ற உறுப்பினராக ஒரு முறையும், தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
குமரி அனந்தனின் மகள்தான் தமிழ்நாடு பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரி மாவட்டம் குமரிமங்கலத்தில் சுதந்திர போராட்ட தியாகி அரிகிருஷ்ணன்- தங்கம்மாள் தம்பதிக்கு 1933ம் ஆண்டு பிறந்த மூத்த மகன்தான் குமரி அனந்தன். இவருடைய தம்பிதான் பிரபல தொழிலதிபரும், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி. பதவியை வகித்தவருமான எச்.வசந்தகுமார் ஆவார்.
1980ம் ஆண்டு காந்தி காமராஜ் கட்சியை தொடங்கியவர் பின்னர் அந்த கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். தமிழ்நாட்டில் அதிக முறை பாத யாத்திரைகளை மேற்கொண்ட தலைவர் குமரி அனந்தன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : கூவத்தூர் ஸ்டைலை கையில் எடுத்த மதுரை திமுக? மானப்பிரச்னையாக மாறும் மா.செ போஸ்ட்..!
மேலும் படிக்க :
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)