Chepakkam Stadium: விரைவில் ஐ.பி.எல்., சேப்பாக்கம் மைதானத்தில் தல - தளபதி; காரணம் என்னவா இருக்கும்?
சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட இரண்டு பெவிலியன்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட இரண்டு பெவிலியன்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். என்னை சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த இரண்டு பெவிலியன்கள் புனரமைக்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பெயரிடப்பட்ட இரண்டு பெவிலியன்களும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயந்தி ஸ்டாலின், மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 90 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள எம்.சி.சி பெவிலியன் மற்றும் அண்ணா பெவிலியனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார்.
சேப்பாக்கம் மைதானத்தில் அண்ணா பெவிலியனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்டேண்ட்க்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டது.
2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் வருகின்ற 22 ஆம் தேதி நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சீல்வைக்கப்பட்ட ஐ.ஜே.கே கேலரிகளை மீண்டும் திறக்க கடந்த 2020ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டு இருந்தாலும் முதன் முறையாக அந்த கேலரிகளில் ரசிகர்கள் போட்டியை பார்க்க வருகின்ற 22ஆம் தேதி அனுமதிக்கப்பட உள்ளனர்.
மொத்தமாக 35ஆயிரம் ரசிகர்கள் போட்டியை காணும் வகையில் மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. புதிதாக புனரமைக்கப்பட்டு உள்ள அண்ணா பெவிலியன் முதல் தளத்தில் வீரர்கள் நவீன வசதிகளுடன் உள்ளரங்கில் பயிற்சி மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மாற்று திறனாளிகள் மைதானத்திற்குள் தங்கள் வீல் சாருடன் வந்து போட்டியை பார்க்கும் வகையில் ஐ கேலரியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
கடந்த 2011ஆம் ஆண்டு மைதானம் 186 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட நேரத்தில் அண்ணா பெவிலியன் மற்றும் எம்.சி.சி பெவிலியன் மட்டும் புனரமைக்கபடாமல் இருந்த நிலையில் தற்போது முழுவதுமாக இடிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.