CM MK Stalin Birthday: 'நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ..' முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலான முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள், திரைபிரபலங்கள் மற்றும் திமுக தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளை பரிமாறி கொண்டு வருகின்றன.
இந்தநிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலான முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-ஆம் பிறந்தநாளில், அவர் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து தரப்பினரின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி நல்லாட்சி வழங்கிட வாழ்த்துகள்.” என பதிவிட்டிருந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-ஆம் பிறந்தநாளில், அவர் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து தரப்பினரின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி நல்லாட்சி வழங்கிட வாழ்த்துகள்.@CMOTamilnadu
— Dr S RAMADOSS (@drramadoss) March 1, 2023
அன்புமணி ராமதாஸ் வாழ்த்து:
இன்று 70-ஆம் பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது பொதுவாழ்வு பணி தொடர வாழ்த்துகிறேன்.@CMOTamilnadu
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) March 1, 2023
இன்று 70-ஆம் பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது பொதுவாழ்வு பணி தொடர வாழ்த்துகிறேன்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து:
முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தனது வாழ்த்தினை தெரிவித்தார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து:
அன்புத் தோழர் முக ஸ்டாலினுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Warmest birthday wishes to dear Comrade @mkstalin. Your efforts to strengthen Kerala - Tamilnadu bonds are deeply appreciated. Standing in defence of federalism, secularism and our mother tongues, you've won hearts across the country. Wishing you happiness, health and success! pic.twitter.com/MSXNipM3GY
— Pinarayi Vijayan (@pinarayivijayan) March 1, 2023
கேரளா-தமிழ்நாடு பிணைப்பை வலுப்படுத்த உங்கள் முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை. கூட்டாட்சி, மதச்சார்பின்மை மற்றும் எங்கள் தாய்மொழிகளின் பாதுகாப்பில் நின்று, நீங்கள் நாடு முழுவதும் இதயங்களை வென்றுள்ளீர்கள். உங்களுக்கு மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வெற்றியை விரும்புகிறேன்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து:
இன்று 70வது பிறந்த நாள் காணும், தமிழக முதல்வர் , திமுக தலைவர், அன்பு சகோதரர் திரு. மு. க. ஸ்டாலின் @mkstalin அவர்கள், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன்.#MKStalin70 pic.twitter.com/jFkWHaPG7p
— Vijayakant (@iVijayakant) March 1, 2023
இன்று 70வது பிறந்த நாள் காணும், தமிழக முதல்வர் , திமுக தலைவர், அன்பு சகோதரர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன்.