மேலும் அறிய

CM Vijay: பெரம்பூர் தொகுதி குறைகளை தீர்க்க திணறுகிறாரா முதல்வர் விஜய்... அப்படி என்ன பிரச்னை?

தனது பெரம்பூர் தொகுதி மக்கள் குறைகளை தெரிவிக்க தொடங்கப்பட்ட வெப்சைட்டில் ஜூலை 21ம் தேதி நிலவரப்படி காலை 10 மணி நிலவரப்படி மொத்தம் 821 புகார்கள் பெறப்பட்டு அதில் 405 புகார்கள் சரி செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் தனது பெரம்பூர் தொகுதி மக்கள் குறைகளை தெரிவிக்க பிரத்யேக இணையதளம் தொடங்கிய நிலையில் அதில் தெரிவிக்கப்பட்ட குறைகள் விரைந்து சரி செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்

2026 சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக பதவியேற்ற ஜோசப் விஜய் இந்த தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். விதிகளின்படி அவர் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனிடையே சென்னை பெரம்பூரில் வெற்றி பெற்ற பிறகு விஜய் அங்கு செல்லாமல் இருந்தார். அதேசமயம் அவருக்கான எம்.எல்.ஏ. அலுவலகம் பிரத்யேக வசதிகளுடன் தயாராகி வந்தது. 

எம்.எல்.ஏ., அலுவலகம் - குறைகளை சொல்ல வெப்சைட்

இந்த நிலையில் கடந்த ஜூலை 13ம் தேதி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதலமைச்சர் விஜய் முதல்முறையாக பெரம்பூர் தொகுதிக்கு சென்று தனது எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்து வைத்தார். அத்துடன் தொகுதி மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க பிரத்யேகமாக https://tvkcm.com/ என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார். இதன்மூலம் மக்களின் குறைகள் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி வெளிப்படையாக தெரிவிக்கப்படும் என கூறப்பட்டது. 

அதுமட்டுமல்லாமல் இந்த வெப்சைட் மூலம் பொதுமக்கள் தங்கள் தொகுதி தேவைகள், குறைகள் ஆகியவை டைப் செய்தோ அல்லது வாய்ஸ் மூலமாக பேசியோ பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 94985 00444 என்ற தொலைபேசி எண்ணும், cmvijayperambur@gmail.com என்ற மெயில் ஐடியும் கொடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் புகார்கள் மீது தீர்வு

இதற்கிடையில் வெப்சைட் தொடங்கிய நாள் முதல் புகார்கள் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்ட நிலையில் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை குறிக்கும் வகையில் தீர்வு கண்ட புகார்கள் பகுதியில் 0 என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக நேற்று சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இது பெருமளவில் பேசுபொருளாக மாறியது. ஆனால் சர்வரில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சரியான டேட்டா காட்டவில்லை என எம்.எல்.ஏ. அலுவலகம் தரப்பில் சொல்லப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் இந்த வெப்சைட்டில் முழு விவரமும் வெளியானது. 

Also Read: GV Markandeyan: அன்று ஸ்டாலின் குடும்பம்.. இன்று விஜய்.. வாயை விட்டு வாங்கி கட்டும் MLA மார்க்கண்டேயன்!

அதன்படி ஜூலை 21ம் தேதி நிலவரப்படி காலை 10 மணி நிலவரப்படி மொத்தம் 821 புகார்கள் பெறப்பட்டு அதில் 405 புகார்கள் சரி செய்யப்பட்டுள்ளது. குறைகளை தீர்க்க சராசரியாக 6 நாட்கள் வரை எடுக்கப்படுகிறது. இதுவரை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் 32 சதவிகித குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. மின் தடை, சாலை வசதி, சுகாதாரம், சாலை பாதுகாப்பு, தெரு விளக்கு பிரச்னை, குப்பைகளை பெறுதல், மழைநீர் வடிகால், கல்வி வசதி, கொசு தொல்லை, தீ தடுப்பு வசதி என பல வகைகளில் புகார்கள் பெறப்பட்டது. 7 வார்டுகளை உள்ளடக்கிய பெரம்பூரில் அதிகப்பட்சமாக 34வது வார்டில் 350 குறைகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை பராமரிப்பு, குப்பை சேகரிப்பு, கல்வி வசதி போன்றவற்றில் மிக குறைவான அளவில் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பெரம்பூர் தொகுதி மக்கள் மட்டுமல்லாமல் பிற தொகுதி மக்களும் புகார்களை தெரிவிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் முதலில் பெரம்பூர் தொகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் விஜய் உறுதியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. தங்களுக்கு வசதி வாய்ப்பை விட சுகாதாரம், மழைநீர் வடிகால் போன்றவை தான் தற்போது அவசியம் என பெரம்பூர் மக்களும் தெரிவிக்கின்றனர். விரைவில் 100 சதவிகிதம் மக்களின் குறைகள் தீர்க்கப்படும் என தவெகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Hero First Electric Bike: இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
Embed widget