மேலும் அறிய

CM Vijay: ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் விஜய் அதிரடி.. தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்?

கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகமானது. இதனால் சிறிய வயதினர் கூட போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டது. அதற்கு நடவடிக்கை எடுப்பதாக விஜய் உறுதியளித்திருந்தார்.

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் முதற்கட்டமாக 500 கடைகளை மூட முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளார். அக்கட்சி சார்பில் முதற்கட்டமாக 9 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருட்கள் புழக்கத்தை ஒழித்தல் ஆகியவற்றிற்கு முதற்கட்டமாக விஜய் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். பெண்கள் பாதுகாப்புக்கான சிங்கப்பெண் பாதுகாப்பு படை, போதைப்பொருட்கள் தடுப்புக்காக மாவட்டந்தோறும் குழுக்கள் ஆகியவை அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். 

ஏற்கனவே கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகமானதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால் சிறிய வயதினர் கூட போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டது. இதனால் குற்றச்செயல்களில் சிறார்கள் அதிகளவில் ஈடுபட்டதும் நிகழ்ந்தது. அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் புதிய முதலமைச்சர் இந்த பிரச்னைகளுக்கு ஒரு தீர்வு காண்பார் என மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். 

அந்த வகையில் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை முதலமைச்சர் விஜய் மூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு நிதி வருவாய் அள்ளித்தரும் மூலங்களில் ஒன்றாக டாஸ்மாக் உள்ளது. இப்படியாக தமிழ்நாடு முழுவதும் தற்போது 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதன்மூலம் மாதம் ரூ.4 கோடி வருவாய் கிடைக்கிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் டாஸ்மாக் மூலம் ரூ.48,344 கோடி கிடைத்தது. 

அதேசமயம் மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது. இதனால் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து - ரயில் நிலையங்கள் ஆகியவை அருகே 500 மீட்டர் தொலைவுக்குள் செயல்படும் டாஸ்மாக் கடைகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இவை விரைவில் மூடப்படும் எனவும் சொல்லப்படுகிறது. பேருந்து நிலையங்களில் மது அருந்துவிட்டு பெண் பயணிகளுக்கு பலர் தொந்தரவு அளித்து வரும் நிலையில் பெண்கள் அச்சமின்றி வெளியில் சென்று வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதேபோல் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் திறப்பு நேரம் காலை 10 மணியில் 12 மணியாக மாற்றப்பட்டது. தொடர்ந்து கடைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. 2021 திமுக ஆட்சியில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. ஆனால் சட்டவிரோத மது விற்பனை தொடங்கி கஞ்சா, குட்கா பிற போதைப்பொருட்கள் புழக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

நடிகர் தனுஷின் திடீர் அரசியல் நகர்வு! பின்னணியில் நடப்பது என்ன? உளவுத்துறைக்கு பறந்த அவசர உத்தரவு!
நடிகர் தனுஷின் திடீர் அரசியல் நகர்வு! பின்னணியில் நடப்பது என்ன? உளவுத்துறைக்கு அவசர உத்தரவு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget