கரூரில் பள்ளி வாகனம் மோதி தந்தையின் கண் முன்பே குழந்தை உயிரிழப்பு
பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூத்த மகனை கூட்டிச் செல்ல வீட்டு வாசல் கதவை நீக்கி சரவணன் வெளியே வந்துள்ளார்.
கரூரில் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருப்பதி நகர் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான சரவணன் - மோகனா தம்பதியருக்கு இரண்டு மகன்கள். நேற்று மதியம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூத்த மகனை கூட்டிச் செல்ல வீட்டு வாசல் கதவை நீக்கி சரவணன் வெளியே வந்துள்ளார்.
அப்போது இரண்டாவது மகன் சாய் மிதுன் என்ற ஒன்றரை வயது குழந்தை வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பள்ளி வாகனத்தின் முன்பு குறுக்கே ஓடியபோது தந்தையின் கண் முன்பே குழந்தையின் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான்.
விபத்து குறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தனியார் பள்ளியின் வேன் மற்றும் ஓட்டுநரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
வீட்டு வாசலிலேயே பள்ளி வாகனத்தில் மோதி ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கா. பரமத்தி அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலி.
கா. பரமத்தி அருகே முன்னாள் சென்ற லாரி மீது பைக் மோதி விபத்தில் ஒருவர் சாவு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கிலி முத்து மகன் அருண்குமார். லாரி ஓட்டுனரான இவர் திருச்சியில் இருந்து புறப்பட்டு கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் லாரியை இயக்கியுள்ளார். புதுக்கனல்லி அருகே சென்ற போது கா. பரமத்தி அடுத்த விஸ்வநாதபுர கிழக்குத் தெருவை சேர்ந்த காளிமுத்து மகன் அரவிந்த் இயக்கி வந்த பைக் முன்னால் சென்ற லாரி மீது பைக் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கா. பரமத்தி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அருகே திருமணமாகாத விரக்தி கூலித் தொழிலாளி தற்கொலை.
கிருஷ்ணராயபுரம் அருகே திருமணமாகாத விரக்தியில் கூலி தொழிலாளி பூச்சி மருந்து குறித்து தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் திருக்காம்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு திருக்காம்புலியூரை சேர்ந்த மணிவேல் மகன் செந்தில்குமார் கூலி தொழிலாளி இவர் திருமணம் ஆகாத விரக்தியில் தலை வீட்டில் விவசாய பயன்பாட்டிற்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து கொடுத்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை விட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு இரவு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தால் இது குறித்து அவரது தம்பி துரைராஜ் கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.