1st T20I - 26 Jun 2021, Sat up next
WI
vs
SA
23:30 IST - National Cricket Stadium, St George's, Grenada
2nd T20I - 27 Jun 2021, Sun up next
WI
vs
SA
23:30 IST - National Cricket Stadium, St George's, Grenada

"எந்த திட்டத்தின் கீழும் நான் எழுதிய புத்தகங்களை வாங்கக்கூடாது" - தலைமைச் செயலாளர் இறையன்பு

எந்த அழுத்தம் வந்தாலும் எந்த திட்டத்தின் கீழும் நான் எழுதிய புத்தகங்களை வாங்க கூடாது என தலைமைச் செயலாளர் இறையன்பு செய்தி வெளியிட்டிருக்கிறார்.

FOLLOW US: 

அன்புடன் வேண்டுகிறேன் என்னும் தலைப்பில் அரசு அலுவலர்களுக்கு, தலைமைச் செயலாளர் இறையன்பு ஒரு செய்தியறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.


அவர்  வெளியிட்டிருக்கும்  அறிக்கையில், "நான் பணி நேரம் முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும் எனக்குத் தெரிந்த தகவல்களை வைத்தும், என் அனுபவங்களைத் தொடுத்தும் சில நூல்களை எழுதி வந்தேன். அவற்றில் உள்ள பொருண்மை, கடற்கரையில் கண்டெடுத்த சிப்பியையே முத்தாகக் கருதி சேகரிக்கும் சிறுவனின் உற்சாகத்துடன் எழுதப்பட்டவை. இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக பள்ளிக் கல்வித்துறைக்கு நான் ஒரு மடல் எழுதியுள்ளேன். நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது என்கிற உத்தரவே அது. பார்ப்பவர்களுக்கு என் பணியின் காரணமாக அது திணிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றி களங்கம் விளைவிக்கும் என்பதால்தான் இத்தகைய கடிதத்தை எழுதியிருக்கிறேன். எந்த வகையிலும், என் பெயரோ, பதவியோ தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதே நோக்கம்.


அரசு விழாக்களில் பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்கள் வழங்கினால் நன்று என்கிற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணை அது. அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில் விநியோகிக்க வேண்டாம் என்று அன்புடன் விண்ணப்பம் வைக்கிறேன். இவ்வேண்டுகோள் மீறப்பட்டால் அரசு செலவாக இருந்தால் தொடர்புடைய அதிகாரியிடம் அது வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்படும். சொந்த செலவு செய்வதையும் தவிர்ப்பது சிறந்தது. எனவே, இத்தகைய சூழலை எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags: chief secretary iraianbu Irai anbu

தொடர்புடைய செய்திகள்

தேர்தல் எப்பொழுது வந்தாலும் சந்திக்க தயார் - பாஜக தலைவர் முருகன்

தேர்தல் எப்பொழுது வந்தாலும் சந்திக்க தயார் - பாஜக தலைவர் முருகன்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் - முதல்வர் ஸ்டாலின்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் - முதல்வர் ஸ்டாலின்

BREAKING LIVE: எஸ்.பி.ஐ டெபாசிட் ஏ.டி.எம்மில் பணம் எடுக்கத் தற்காலிகமாக தடை..!

BREAKING LIVE: எஸ்.பி.ஐ டெபாசிட் ஏ.டி.எம்மில் பணம் எடுக்கத் தற்காலிகமாக தடை..!

மத்திய அரசு சட்டவரைவுக்கு எதிராக 9 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!

மத்திய அரசு சட்டவரைவுக்கு  எதிராக 9 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!

எஸ்.பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு - 4 வாரத்துக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்..

எஸ்.பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு -  4 வாரத்துக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்..

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE : கொரோனா மூன்றாவது அலைக்கு தயாராக இருக்க வேண்டும் - ராகுல்காந்தி எச்சரிக்கை

Tamil Nadu Coronavirus LIVE : கொரோனா மூன்றாவது அலைக்கு தயாராக இருக்க வேண்டும் - ராகுல்காந்தி எச்சரிக்கை

முதல்வரின் காலைத்தொட்டு கும்பிட்ட கலெக்டர்கள்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

முதல்வரின் காலைத்தொட்டு கும்பிட்ட கலெக்டர்கள்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

Thalapathy 65 First Look Poster: விஜய் 65 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்: மாஸ் ’BEAST'

Thalapathy 65 First Look Poster:  விஜய் 65 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்:  மாஸ் ’BEAST'

இனி ஆன்லைன் க்ளாஸ் இப்படித்தான் நடக்கவேண்டும்: தமிழக அரசின் 11 கட்டளைகள்..!

இனி ஆன்லைன் க்ளாஸ் இப்படித்தான் நடக்கவேண்டும்: தமிழக அரசின் 11 கட்டளைகள்..!