மேலும் அறிய

முதல்வர் வருகையை முன்னிட்டு 14ம் தேதி போக்குவரத்து மாற்றம் - வாகனங்கள் எந்த வழியாக செல்ல வேண்டும்? - முழு விவரம் இதோ

முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்.

திருப்பத்தூர்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் 14ஆம் தேதி தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

எங்கெங்கு போக்குவரத்து மாற்றம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடக்கும் திமுக பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வரும் 14ம் தேதி ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதிக்கு வருகை தர உள்ளார். இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி, வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் இருந்து திருப்பத்தூருக்கு வரும் வாகனங்கள், திருப்பத்தூர் சாலையை தவிர்த்து, தேசிய நெடுஞ்சாலை மார்க்கமாக உள்ள இணைப்பு சாலை வழித்தடங்களில் செல்ல வேண்டும்.  திருப்பத்தூர் நகரில் இருந்து வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் நோக்கி செல்லும் வாகனங்கள், திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையை தவிர்த்து வெங்களாபுரம் கூட்ரோடு மாடப்பள்ளி, ஆலங்காயம் மார்க்கமாக செல்ல வேண்டும்.

மேலும், திருப்பத்தூர் நகரில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் புதுப்பேட்டை கூட்டுரோடு, ஜெயபுரம் சந்திப்பு சாலை, புள்ளானேரி வழியாக செல்ல வேண்டும். தருமபுரி, பெங்களூரு, கிஷ்ணகிரி மற்றும் ஓசூர் வழியாக செல்லும் பேருந்துகள் கிருஷ்ணா சில்க்ஸ் அருகில் இருந்து புறப்பட வேண்டும்.
அதேபோல் திருவண்ணாமலை, வேலூர், சேலம் மற்றும் சென்னை செல்லும் பேருந்துகள் திருப்பத்தூர் பஸ் டிப்போ அருகில் இருந்து புறப்பட வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றம் 14ம் தேதி ஒருநாள் முழுமையாக அமல்படுத்தப்படும். மேற்கண்ட தற்காலிக போக்குவரத்து மாற்றங்களுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 ட்ரோன்கள் பறக்க தடை

மேலும், அன்றைய தினம் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு நாள் முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
5 மாதங்களில் ரூ.2.49 லட்சம் கோடி!ஏற்றுமதியில் அசுர வளர்ச்சி! முதலிடம் பிடித்து கெத்து காட்டும் தமிழ்நாடு! 
5 மாதங்களில் ரூ.2.49 லட்சம் கோடி! முதலிடம் பிடித்து கெத்து காட்டும் தமிழ்நாடு! அசுர வளர்ச்சி!  
இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
Embed widget