(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video : வாலிபர்களுடன் வாலிபால் ஆடிய முதலமைச்சர்... சமத்துவபுரத்தில் ஒரு சம்பவம்..
வானூர் அருகே கொழுவாரி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள சுமார் ரூ.2 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டுள்ளது.
சாதிய ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சமத்துவம் பிறக்க வேண்டும் என கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் பெரியார் சமத்துவபுரம். வீடற்ற ஏழை, எளிய மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒற்றுமையாக வாழவேண்டும் என தமிழகம் முழுவதும் சமத்துவபுரம் அமைத்தார் கலைஞர். இந்த திட்டம் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக நிறைவேறியது. ஆனால் சில இடங்களில் திட்டம் நிறைவேற்றப்பட்டு திறக்கப்படாமலேயே மூடுவிழா கண்டது. அதில் ஒன்று தான் வானூர் அருகே கொழுவாரி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள சமத்துவபுரம்.
இந்த சமத்துவபுரம் சுமார் ரூ.2 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த சமத்துவபுரத்தை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு வீட்டு சாவியை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு திடலை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்பொழுது, அங்கு மாணவர்கள் வாலிபால் விளையாடுவதற்கு தயாராக இருந்தனர்.
அவர்களிடமிருந்து வாலிபாலை பெற்றுக்கொண்ட ஸ்டாலின், தனது கைகளால் அந்த பந்தை அடித்து ஆட்டத்தை தொடங்கி வைத்தார். சிறிது நேரம் அங்கிருந்த வாலிபர்களுடன் வாலிபால் விளையாடிய முக ஸ்டாலின். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பினார்.
இதைத் தொடர்ந்து வளாகத்தில் ரூ.2.75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையையும், மேலும் ரூ.10.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம், ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள நூலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதல்வர்
ஒழுந்தியாம்பட்டு ஊராட்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 ஆயிரத்து 722 பயனாளிகளுக்கு ரூ.4269.98 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.2400.77 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 38 திட்டப்பணிகளையும் அவர் திறந்து வைக்க உள்ளார்.
இதையடுத்து திண்டிவனம் வட்டம் பெலாக்குப்பம் சிப்காட் தொழில்பூங்கா வளாகத்தில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் லோட்டஸ் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்