Cm Stalin : 'இவ்வளவு காரமாவா சாப்பிடுவீங்க' : கேள்வி கேட்ட முதலமைச்சர்... வியக்க வைத்த நரிக்குறவர் மாணவி..
திருவள்ளுவர் மாவட்டம் திருமுல்லைவாயில் நரிக்குறவர் காலனியில் முதியோர் உதவித் தொகை உள்ளிட்டவைகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் நல திட்டங்களை வழங்கினார்.
திருவள்ளுவர் மாவட்டம் திருமுல்லைவாயில் நரிக்குறவர் காலனியில் குடும்ப அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்டவைகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் நல திட்டங்களை வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, ஆவடி பேருந்துநிலையம் அருகே உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலினை, நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த பள்ளி மாணவிகளான தர்ஷினி, பிரியா, திவ்யா ஆகியோர் தங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிடுமாறு அழைத்தனர்.
அவர்களின் அழைப்பை ஏற்ற முக ஸ்டாலின், மாணவிகளின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்பொழுது, அந்த வீட்டில் இருந்த பெண்கள் முதலமைச்சருக்கு இட்லி, வடை மற்றும் இவற்றிக்கு தொட்டுக்கொள்ள நாட்டுகோழி கொடுத்தனர். முதல் இரண்டு வாய் சாப்பிட்ட முக ஸ்டாலின், அருகில் இருந்த மாணவிகளிடம் உங்கள் வீட்டில் எப்பொழுது காரமாதான் சாப்பிடுவீங்களா..? என்று கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த மாணவிகள், காரமாக சாப்பிட்டால்தான் சளி, இருமல் வருவதில்லை. அப்படி சாப்பிடுவதுதான் ஜம்முன்னு இருக்கும். காய்ச்சலும் வராது .எங்காளுக எல்லாம் அதனால் தான் நன்றாக இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து, இரண்டொரு வாய் சாப்பிட்ட முக ஸ்டாலின் எந்திரிச்சு கை கழுவ சென்றார். இதைப்பார்த்த அதிர்ச்சியடைந்த நரிக்குறவர் பெண்கள், இன்னும் இரண்டு வாய் சாப்பிடுங்க என கூற அந்த வீடியோவும் மிகப்பெரிய வைரலானது.
தொடர்ந்து, ஆவடி மாநகர காவல் , அம்பத்தூர் காவல் நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆவடி நரிக்குறவர் காலனி பகுதியில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சென்னைக்குப் புறப்பட்ட முதலமைச்சர் திடீரென அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
சட்டம் ஒழுங்கை ஆய்வாளர் அறையில் அமர்ந்து காவலர்கள் வார விடுப்பு பதிவேடு மற்றும் எஃப் ஐ ஆர் பதிவேட்டை ஆய்வு செய்தார். மகப்பேறு விடுப்பில் சென்றுள்ள பெண் காவலர் புவனேஸ்வரி அவர்களின் விடுப்பு தொடர்பான விவரங்களையும் கேட்டறிந்தார். காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்கள் கைதிகளின் அறையை உள்ளிட்டவை ஆய்வு செய்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்