விடுதலைக்கு எதிராக முதல் போராட்டத்தை எழுப்பியது தமிழ்நாடு.. பட்டியலிட்டு கெத்துகாட்டிய முதலமைச்சர்!
விடுதலைக்கு எதிராக முதல் போராட்டத்தை எழுப்பியது தமிழ்நாடுதான் என்று சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசினார்.
நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. 1947ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திர தினம் கிடைத்தது. இன்று உடன் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதை கொண்டாடும் வகையில் கடந்த ஆண்டு முதல் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. ஆசாதி கா அமிர்த் மஹோத்சவ் என்ற பெயரில் பல்வேறு கொண்டாட்டங்களை நடத்தி வந்தது. தமிழ்நாட்டிலும் சிறப்பான கொண்டாட்ட ஏற்பாடுகள் செயப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று காலை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார். அத்துடன் அவர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் முக ஸ்டாலின், விடுதலைக்கு எதிராக முதல் போராட்டத்தை எழுப்பியது தமிழ்நாடுதான் என்றும், சுதந்திர போராட்ட அடிமைத்தனத்தை முதலில் உடைக்க தொடங்கியது தமிழ்நாடுதான் என்றும் குறிப்பிட்டார்.
#BREAKING | 76-வது சுதந்திர தின விழா - சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் https://t.co/wupaoCQKa2 | #TNGovt #MKStalin #IndependenceDay #IndiaAt75 pic.twitter.com/llDgBRC19T
— ABP Nadu (@abpnadu) August 15, 2022
தொடர்ந்து பேசிய அவர், “75 ஆண்டுகால சுதந்திர காற்றை சுவாசிக்க காரணமாய் இருந்த வீர தியாகிகள் அனைவருக்கும் வீர வணக்கங்கள். இந்த இந்திய துணை கண்டத்திலேயே சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தது தமிழ்நாடுதான். 1500 ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலுன்றியது என்றால், ஒரு நெல் மணியை கூட உனக்கு கப்பம் கட்ட முடியாது என்று 1755 ம் ஆண்டு சொன்னவர் பூலித்தேவன். சிவகங்கைக்கு அருகே உள்ள பனையூரை சேர்ந்த மண்டியிடாத வீரன் மருதநாயகம் கொல்லப்பட்ட ஆண்டு 1764. தானம் கேள் தருகிறேன், வரி என்று கேட்டால் தரமாட்டேன் என்று சொன்ன வீரன்தான் வீரபாண்டிய கட்டபொம்மன். அவர் தூக்கிலிடப்பட்டபோது ஆண்டு 1799”.
இப்படியாக பல தமிழ்நாட்டை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயரை சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பட்டியலிட்டார். அவை பின்வருமாறு :
• பூலித்தேவர்
• மருதநாயகம்
• கட்டபொம்மன்
• சுந்தரலிங்கம்
• வடிவு
• வீரமங்கை வேலுநாச்சியார்
• குயிலி
• மருது பாண்டியர்கள்
• தீரன் சின்னமலை
• தளபதி பொல்லான்
• திப்பு சுல்தான்
• வ.உ.சி
• சுப்பிரமணிய சிவா
• பாரதியார்
• திரு.வி.க
• பெரியார்
• செண்பகராமன்
• வீரவாஞ்சிநாதன்
• அழகுமுத்துக்கோன்
• நாமக்கல் கவிஞர்
• சிங்காரவேலர்
• தோழர் ஜீவா
• காமராஜர்
• ஜே.சி.குமரப்பா
• இரட்டை மலை சீனிவாசன்
• காகிதமில்லத்
• பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
• ஜமத்கனி
• ராஜாஜி
• திருப்பூர் குமரன்
ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு விடுதலைக்கு எதிராக முதல் போராட்டத்தை எழுப்பியது தமிழ்நாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்