மேலும் அறிய

செயற்கை மணல்  உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கை .. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

இயற்கை வளங்களை பாதுகாத்து, குறைந்த விலையில் தரமாக மண் வழங்கும் வகையிலும், செயற்கை மணல்  (M-Sand)  உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.   

இயற்கை வளங்களை பாதுகாத்து, குறைந்த விலையில் தரமாக மண் வழங்கும் வகையிலும், செயற்கை மணல்  (M-Sand)  உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.   

இது தொடர்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில், “கட்டுமானப் பணிகளில் ஆற்று மணலுக்கு மாற்றாக சமீப காலமாக எம்.சேண்ட் உபயோகம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தரமற்ற எம்.சேண்டினை சந்தைகளில் விற்பனை செய்வதைத் தடுக்கவும், கண்காணித்திடவும் எம்.சேண்ட் தயாரிப்பு, தரம், விலை மற்றும் அவற்றைக் கொண்டு செல்லுதல் ஆகியவற்றை வரைமுறைப்படுத்த மாநில அளவில் கொள்கை ஒன்று தேவைப்படுவதாக அரசு கருதியது.  இதை தொடர்ந்து தலைமுறைகளுக்கிடையேயான சமபங்கு கொள்கையினை உலக அளவில் ஏற்றுக் கொள்ளும் சூழலில் ஆறுகள், காடுகள், கனிமங்கள் மற்றும் பிற இயற்கை வளங்களை மனித இனத்தின் ஒரு தலைமுறைக்கு மட்டுமின்றி அடுத்தடுத்த தலைமுறைகளின் நலனுக்காக பாதுகாக்க வேண்டி செயற்கை மணல்  (M-Sand) உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கை 2023 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இன்றிலிருந்து இந்தக் கொள்கை நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை மணல்  (M-Sand)  உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான வெளியிடப்பட்டுள்ள புதிய கொள்கையில்  முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. அதிகமான அளவு மணல் எடுத்தல் மற்றும் இயற்கைத் வளங்களின் குறைபாடு ஆகியவற்றால் ஆற்றுமணலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய சுற்றுச்சூழல், நில பயன்பாட்டுச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அவசியம் எழுந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு, கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஆற்று மணலுக்கு மாற்றாக செயற்கை மணல் மற்றும் அரவை மணல் உற்பத்தியை அதிகரிக்க கருதுகிறது.  அதோடு, செயற்கை மணல், அரவை மணல் குவாரிச் செயல்பாட்டின் போது பயன்பாட்டிற்கு உதவாத கற்களிலிருந்தும் சிறிய அளவிலான கிரானைட் கற்களிலிருந்தும் தயாரிக்கப்படுவதால் குவாரிகளில் ஏற்படும் கழிவுகளின் அளவினை குறைப்பதற்கு பயன்படுகிறது.

கிரானைட் மற்றும் சாதாரணக்கல் குவாரிகளில் (Rough stone quarries) கிடைக்கும் சிறிய அளவிலான கற்கள் செயற்கை மணல் மற்றும் அரவை மணல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. மாநிலத்தில் குவாரி கழிவுகளே இல்லாத நிலையினை உருவாக்குவதே இக்கொள்கையின் குறிக்கோளாகும்.  மதிப்பு குறைந்த பயன்படாத பாறைக்கற்கள் மற்றும் கழிவுகளிலிருந்து, செயற்கை மணல், அரவை மணல் போன்ற உயர் மதிப்புப் பொருள் உருவாக்கப்படுகிறது. அதே நேரத்தில் அதிக விலையுள்ள ஆற்று மணலுடன் ஒப்பிடும் போது பொதுமக்கள் செலவு குறைந்த தரமான கட்டுமானப் பொருளை பெறலாம். உற்பத்திக்கான தரம் முறையாக பயன்படும்பொழுது செயற்கை மணல் மற்றும் அரவை மணல் அதிக நெகிழ்வுத்தன்மையும், உறுதித்தன்மை, எடை மற்றும் குறைந்த ஊடுருவக்கூடிய தன்மையும் கொண்டுள்ளது.

இந்த நன்மைகள் காரணமாக செயற்கை மணல் மற்றும் அரவை மணல் தற்போது கட்டுமானத் துறையில் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆற்று மணலைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதன் மூலம் ஆற்றின் சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுப்பது, இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் (BIS) பரிந்துரைக்கப்பட்ட தரத்தையொட்டி அதிக வலிமை மற்றும் செலவு குறைந்து, ஆற்று மணலுக்கு மாற்று கட்டுமானப் பொருளாக, தரமான செயற்கை மணல் மற்றும் அரவை மணலின் பயன்பாட்டை ஊக்குவிக்கு முடியும் தமிழ்நாட்டில் உள்ள செயற்கை மணல் மற்றும் அரவை மணல் உற்பத்தி தொழிற்சாலைகள் தொடர்புடைய சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளை முறையாக பின்பற்றச் செய்தல், செயற்கை மணல், அரவை மணல் உற்பத்தி தொழிற்சாலைகளின் ஒப்புதலுக்கான நடைமுறையை முறைப்படுத்தப்படுகிறது.

கல் குவாரிகளை மட்டுமே நம்பியிருக்கும் மண் அரைக்கும், உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை பெறுவதற்கு வழி வகை செய்வது. கட்டடங்கள், கான்கிரீட் கட்டமைப்புகள் மற்றும் குவாரி கழிவுகள் கட்டுமான மற்றும் இடிப்பு கழிவுகளை நேர்த்தியான முறையில் மறுசுழற்சி செய்வதை ஊக்குவித்தல், மாநிலத்தில் கழிவு அற்ற  (Zero Waste) சுரங்கம், குவாரிகளை ஊக்குவித்தல், இக்கொள்கையின்படி செயற்கை மணல், அரவை மணல் (M-Sand / Crushed Sand) உற்பத்தி செய்வதற்காக தனிப்பட்ட குவாரி குத்தகைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget