மேலும் அறிய
பெல்ஜியம் சாக்லேட்டில் நடராஜர் சிலை; சிதம்பரத்தில் பேக்கரி ஊழியர்கள் அசத்தல்
சாக்லேட்டில் வடிவமைக்கப்பட்ட நடராஜர் சிலை -72 கிலோ சாக்லேட்டில் மூன்றடி உயரத்தில் வடிவம் வைத்து அசத்திய பேக்கரி ஊழியர்கள்.
![பெல்ஜியம் சாக்லேட்டில் நடராஜர் சிலை; சிதம்பரத்தில் பேக்கரி ஊழியர்கள் அசத்தல் Chidambaram bakery staff made a 3 feet high, 2 feet wide 72 kg Nataraja statue realistically in Belgium chocolate in 5 days TNN பெல்ஜியம் சாக்லேட்டில் நடராஜர் சிலை; சிதம்பரத்தில் பேக்கரி ஊழியர்கள் அசத்தல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/08/c6b8155f435a8785f0701fef795f8aa81702035654402113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சாக்லேட் நடராஜர் சிலை
சிதம்பரத்தில் தனியார் பேக்கரி கடையில் பெல்ஜியம் சாக்லேட்டில் 5 நாட்களில் 3 அடி உயரம் 2 அடி அகலத்தில் 72 கிலோ சாக்லேட்டில் தத்ரூபமாக நடராஜர் சிலையை செய்த பேக்கரி ஊழியர்கள்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் திருக்கோயில் அமைந்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் அருகில் தெற்கு ரத வீதியில் புதிதாக ஸ்வீட் & பேக்கரி கடை ஒன்று திறக்கப்பட்டது. இந்த கடையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெல்ஜியம் சாக்லேட்டில் 5 நாட்களில் நடராஜர் சிலை தத்ரூபமாக செய்யப்பட்டது. இந்த சிலை 3 அடி உயரமும் 2 அடி அகலத்தில் 72 கிலோ சாக்லேட்டில் செய்யப்பட்டு அச்சு அசலாக நடராஜர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் குளிரூட்டப்பட்ட நிலையில் இருந்தால் இந்த பெல்ஜியம் சாக்லேட்டில் செய்யப்பட்ட நடராஜர் சிலை சுமார் 6 மாதம் வரை தன்மை மாறாமல் இருக்கும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சாக்லேட்டால் செய்யப்பட்ட நடராஜர் சிலையை கண்டு வியப்புடன் பார்த்து செல்கின்றனர். மேலும் வருகின்ற கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு பல்வேறு வகையான புதிய மாடல்கள் கொண்ட சாக்லேட்டில் கேக்குகள் செய்து அசத்தி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion