![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Chennai Rain Alert: சென்னைக்கு கனமழை.. வந்திருக்கும் புது அப்டேட்.. முழுசா படிங்க, பத்திரமா இருங்க..!
Chennai Rain Alert: தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
![Chennai Rain Alert: சென்னைக்கு கனமழை.. வந்திருக்கும் புது அப்டேட்.. முழுசா படிங்க, பத்திரமா இருங்க..! Chennai Weather Forecast Chances of Heavy Rain November 26, 27 Chennai, Chengalpattu, Kanchipuram, Thiruvallur districts Chennai Rain Alert: சென்னைக்கு கனமழை.. வந்திருக்கும் புது அப்டேட்.. முழுசா படிங்க, பத்திரமா இருங்க..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/23/21703c361bcdac94479966e4d8891c90_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அதன்படி மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர், புதிதாக உருகாவுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை.
காற்றழுத்த தாழ்வுப்பட்குதி காரணமாக நாளை மறுநாள் (நவம்பர் 25) முதல் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், நவம்பர் 26, 27ல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தெரிவிக்கப்பட்ட வானிலை எச்சரிக்கை அறிவிப்பின்படி, தென்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யயும். மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. அதேசமயத்தில், வங்கக்கடல் பகுதியில் அடுத்த 48 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் கீழ்பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 4 அல்லது 5 நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசை இடையே தமிழக கடற்கரையை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளது. இதனால் கர்நாடகா, கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை பரவலாக மற்றும் மிகவும் பரவலாக மழை பெய்யும். அடுத்த 5 நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் கனமழை பெய்யும்.
அடுத்த 5 நாட்களில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 25-ந் தேதி முதல் தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் புதுச்சேரி, கேரளா மற்றும் மாஹேயில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேசமயம் அடுத்த 2 நாட்களில் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் வடக்கில் குறிப்பிட்ட பகுதிகளில் குளிர்அலை வீசுவதற்கும் மிகவும் சாத்தியம் உள்ளதாகவும், அது பின்னர் படிப்படியாக குறையும் என்றும் இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)