மேலும் அறிய

Crime: நெஞ்சு வலிக்கு தவறான சிகிச்சை அளித்த டாக்டர்... ஓராண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்

சென்னை தண்டையார்ப்பேட்டை சேர்ந்த சரவணக்குமார் என்பவருக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இருதய நோயால் பாதிக்கப்பட்டவருக்கு , தவறான ஊசி செலுத்திய மருத்துவருக்கு 1 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஸ்ரீரங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் மீனாம்பாள் (வயது 56) இவரது மகன் சரவணக்குமார் (31) இன்ஜினியர். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு வேலைக்கு செல்வதற்காக கம்பெனி பஸ்ஸில் ஏறிய போது நெஞ்சி வலி காரணமாக திரும்பி வீட்டுக்கு வந்தார். அவரது உறவினர்கள் அதே பகுதி சஞ்சீவீராயன் கோயில் தெருவில் உள்ள தனியார் (வசந்தா  ஆஸ்பத்திரிக்கு) நெஞ்சு வலிக்காக சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு இ.சி.ஜி. எடுக்கப்பட்டது.

இதன் பின்னர் மருத்துவமணையின் மருத்துவர் நந்திவர்மன் (வயது 61) குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு சிகிச்சை அளிப்பவர். இந்நிலையில் சரவணக்குமார் தனது  இ.சி.ஜி. ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு மருத்துவரை சந்தித்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் ஒன்றுமில்லை என்று கூறி ஒரு ஊசி போட்டுள்ளார். சிறிது நேரத்தில் சரவணகுமாரின் உடல்நிலை மோசமாகவே அவரது உறவினர்கள் வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளனர்.

அதற்கு டாக்டர், அவருக்கு சாதாரண வலி தான் ஒரு பிரச்சனை இல்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் சரவணகுமார் உயிரிழந்தார். உறவினர்களுக்கு சரவணகுமார் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டு தண்டையார்பேட்டை காவல் துறையில் புகார் அளித்தனர்.  இது எடுத்த தண்டையார்பேட்டை போலீசார்  சரவணகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் அறிக்கையில் டாக்டர் சரவணகுமாருக்கு தவறான ஊசி போடப்பட்டு உள்ளது என்று உடற்கூறு ஆய்வில் தெரிய வந்தது. மேலும் இருதய நோய் பாதிக்கப்பட்டவருக்கு ஊசி மூலம் தவறான மருந்து வழங்கப்பட்டுள்ளது தெரிந்தது.  இதையடுத்து இந்த வழக்கு சென்னை பெருநகர 15-வது ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி சுதா விசாரித்து வந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் சரவணகுமாருக்கு சரியான சிகிச்சை அளிக்காமல், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு, கவனக்குறைவாக செயல்பட்ட டாக்டர் நந்திவர்மனுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை, மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் பணம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இது தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டது. தவறான சிகிச்சை அளித்த டாக்டர் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Tamilnadu Round Up: டாஸ்மாக் வார்னிங், குறைந்த வெள்ளி, உயர்ந்த தங்கம் விலை, EPS & ஸ்டாலின் ஆலோசனை - தமிழ்நாட்டில் இதுவரை
டாஸ்மாக் வார்னிங், குறைந்த வெள்ளி, உயர்ந்த தங்கம் விலை, EPS & ஸ்டாலின் ஆலோசனை - தமிழ்நாட்டில் இதுவரை
Internal conflict in AIADMK : தவெகவிற்கு ஆதரவு.! தூக்கியடிக்கப்பட்ட அதிமுக மாஜி அமைச்சர்கள்- இபிஎஸ், எஸ்பிவி அடுத்த திட்டம் என்ன.?
தவெகவிற்கு ஆதரவு.! தூக்கியடிக்கப்பட்ட அதிமுக மாஜி அமைச்சர்கள்- இபிஎஸ், எஸ்பிவி அடுத்த திட்டம் என்ன.?
"விஜய்க்கு அதிமுக-வின் ஆதரவு தேவையில்லை! தனித்தே ஆட்சி தருவார்..” கார்த்தி சிதம்பரம் அதிரடி
TTV vs VIjay : த.வெ.கவினர் செய்த அசிங்க அரசியல்.! இனியும் தொடர்ந்தால் விட மாட்டேன்- வெளுத்து வாங்கும் டிடிவி
த.வெ.கவினர் செய்த அசிங்க அரசியல்.! இனியும் தொடர்ந்தால் விட மாட்டேன்- எச்சரிக்கும் டிடிவி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

ஜெ.வின் ஆன்மீக வழிகாட்டி இன்று விஜய்யின் சிறப்பு அதிகாரி! யார் இந்த ரிக்கி ரதன்
வேலுமணி CV சண்முகம் உட்பட 26 பேரின் பதவிகள் பறிப்பு எடப்பாடி அதிரடி
சட்டமன்றத்தில் விஜய்க்கு ஆதரவு அமமுக காமராஜ் நீக்கம் TTV அதிரடி!
DRUGS-க்கு END உளவுத்துறைக்கு புதிய ஐ.ஜி CM விஜய் அதிரடி மூவ் யார் இந்த அஸ்ரா கார்க்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”ஏது ரீல்ஸ் ஆட்சியா? உங்க அப்பாகிட்ட சொல்லி இருக்கலாமே” உதயநிதியை ரவுண்டு கட்டிய தவெக பாய்ஸ்
”ஏது ரீல்ஸ் ஆட்சியா? உங்க அப்பாகிட்ட சொல்லி இருக்கலாமே” உதயநிதியை ரவுண்டு கட்டிய தவெக பாய்ஸ்
Internal conflict in AIADMK : தவெகவிற்கு ஆதரவு.! தூக்கியடிக்கப்பட்ட அதிமுக மாஜி அமைச்சர்கள்- இபிஎஸ், எஸ்பிவி அடுத்த திட்டம் என்ன.?
தவெகவிற்கு ஆதரவு.! தூக்கியடிக்கப்பட்ட அதிமுக மாஜி அமைச்சர்கள்- இபிஎஸ், எஸ்பிவி அடுத்த திட்டம் என்ன.?
Tamilnadu Round Up: டாஸ்மாக் வார்னிங், குறைந்த வெள்ளி, உயர்ந்த தங்கம் விலை, EPS & ஸ்டாலின் ஆலோசனை - தமிழ்நாட்டில் இதுவரை
டாஸ்மாக் வார்னிங், குறைந்த வெள்ளி, உயர்ந்த தங்கம் விலை, EPS & ஸ்டாலின் ஆலோசனை - தமிழ்நாட்டில் இதுவரை
TN Govt: மீண்டும் சிக்சர் அடித்த விஜய்.. 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யத் தடை..
TN Govt: மீண்டும் சிக்சர் அடித்த விஜய்.. 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யத் தடை..
சூர்யாவின் கருப்பு திரைப்படம் ரிலீஸ் ரத்து? தயாரிப்பாளரின் நள்ளிரவு விளக்கத்தால் ரசிகர்கள் ஷாக்
சூர்யாவின் கருப்பு திரைப்படம் ரிலீஸ் ரத்து? தயாரிப்பாளரின் நள்ளிரவு விளக்கத்தால் ரசிகர்கள் ஷாக்
CV Shanmugam: OPS-ஐ விரட்டிவிட்ட பாவத்திற்குத்தான் தண்டனை அனுபவிக்கிறோம்.. சிவி சண்முகம் புலம்பல்
CV Shanmugam: OPS-ஐ விரட்டிவிட்ட பாவத்திற்குத்தான் தண்டனை அனுபவிக்கிறோம்.. சிவி சண்முகம் புலம்பல்
TTV vs VIjay : த.வெ.கவினர் செய்த அசிங்க அரசியல்.! இனியும் தொடர்ந்தால் விட மாட்டேன்- வெளுத்து வாங்கும் டிடிவி
த.வெ.கவினர் செய்த அசிங்க அரசியல்.! இனியும் தொடர்ந்தால் விட மாட்டேன்- எச்சரிக்கும் டிடிவி
Kia Carens Clavis EV: ரூ.26000 இருந்தா போதும்.. காரென்ஸ் க்ளாவிஸிற்கு கியாவின் EMI புதிய சலுகை - ரேஞ்ச், அம்சங்கள்
ரூ.26000 இருந்தாலே போதும்.. காரென்ஸ் க்ளாவிஸிற்கு கியாவின் புதிய EMI சலுகை - ரேஞ்ச், அம்சங்கள்
Embed widget