IT Raid: சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.. காலையிலேயே அதிரடி..
சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் இன்று காலை முதல் தியாகராய நகர், மந்தைவெளி, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தி. நகர் பசுல்லா சாலையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹைதராபாத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் கே எஸ் கே எனர்ஜி என்ற தனியார் நிறுவனம் தொடர்பான இடங்களில் ஹைதராபாத் வருமானவரித்துறை அதிகாரிகளுடன் சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தியாகராய நகர் செம்மஞ்சேரி தேனாம்பேட்டை மந்தைவெளி மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் அன்மை காலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் தனியார் நிறுவனங்களில்சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் ஜனவரி 2 ஆம் தேதி, சென்னை உட்பட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, கோவை, மதுரை, ஈரோடு, சேலம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு செயல்படும் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர். சென்னை அமைந்தக்கரையில் இருக்கும் கட்டுமான நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதேபோன்று கீழ்பாக்கம் ஈகா திரையரங்கிற்கு அருகில் ராஜரத்தினம் தெருவில் உள்ள தனியார் கட்டுமான நிறுவன அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிறுவனம் தொடர்பாக எழும்பூரில் காசா மேஜர் சாலையில் இருக்கும் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. சின்னிப்பாளையம் குழந்தைசாமி பாலசுப்ரமணியம் மற்றும் சின்னி பாளையம் குழந்தைசாமி வெங்கடாசலம் ஆகிய இருவரும் சேர்ந்து சி எம் கே ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் நடத்தி வந்தனர். இவர்கள் தொடர்பான இடங்களிலும் சோதனை நடைபெற்றது. மேலும் சி கே பாலசுப்பிரமணியம் இயக்குனராக இருந்து வரும் கிரீன் பீல்ட் மற்றும் ட்ரிநிவியா கட்டுமான நிறுவனங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.