போராட்டத்தில் இறங்கிய சட்ட கல்லூரி மாணவர்கள்.. திமுக அரசுக்கு எதிராக கொந்தளித்த நயினார் நாகேந்திரன்
திமுக அரசின் அவல ஆட்சியில் சட்டம், ஒழுங்கின் வலிமையானத் தூண்களான வருங்கால வழக்கறிஞர்களும், நீதியரசர்களும் இப்படி நீதி கேட்டு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் கழிவறை, முறையான கட்டிடங்கள், மாணவர் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அங்கு படிக்கும் மாணவர்கள் 7 மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் சட்டக் கல்லூரி மாணவர்கள்:
இந்த விவகாரத்தில் திமுக அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்திய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "சென்னை தரமணியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் கழிவறை, முறையான கட்டிடங்கள், மாணவர் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அங்கு படிக்கும் மாணவர்கள் 7 மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளதாக வெளியாகியுள்ள காணொளி, திமுக அரசின் நிர்வாகத் தோல்விக்கான மற்றுமொரு சான்று.
திமுக அரசின் அவல ஆட்சியில் நமது சட்டம், ஒழுங்கின் வலிமையானத் தூண்களான வருங்கால வழக்கறிஞர்களும், நீதியரசர்களும் இப்படி நீதி கேட்டு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது வருத்தமளிக்கிறது.
“சட்டக் கல்லூரிகளில் நிரந்தர இணை பேராசிரியர்களை நியமிக்க முடியாவிடில் அரசு அவற்றை இழுத்து மூடி விடலாம்” என சில நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த போதும் தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் அரசு ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தராதது ஏன்?
சென்னை தரமணியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் கழிவறை, முறையான கட்டிடங்கள், மாணவர் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அங்கு படிக்கும் மாணவர்கள் 7 மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளதாக வெளியாகியுள்ள காணொளி, @arivalayam அரசின் நிர்வாகத் தோல்விக்கான மற்றுமொரு… pic.twitter.com/DEzaFqDMBe
— Nainar Nagenthiran (@NainarBJP) June 25, 2025
திமுக அரசுக்கு எதிராக கொந்தளித்த நயினார் நாகேந்திரன்:
ஒவ்வொரு ஆண்டும் இத்தனை புதிய கல்லூரிகளைத் திறக்கிறோம் என விளம்பரப்படுத்தினால் மட்டும் போதுமா? அடிப்படை வசதிகளும் கற்பிக்க ஆசிரியர்களும் அற்ற வெற்று கட்டிடங்களால் யாருக்கு என்ன பயன்? எனவே, கல்விக் கூடங்களில் அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர முடியாத திமுக அரசின் அலட்சியத்தால் படிக்கும் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகும் அபாயம் உள்ளது என்பதை உணர்ந்து, வெறும் விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு சற்று ஆட்சி நிர்வாகத்திலும் கவனம் செலுத்தி தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.





















