Chennai Covid Resurgence: சென்னையில் மீண்டும் தொற்று அதிகரிப்பு- நிபுணர்கள் எச்சரிக்கை
புதிய பாதிப்புகளின் வருடாந்திர எண்ணிக்கை 10 முதல் 20% வரை அதிகரித்தால், தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்;
சென்னையில், கடந்த இரண்டு வாரங்களாக அன்றாட புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. கடந்த 12ம் தேதி சென்னையின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 116 ஆக இருந்த நிலையில், இன்று 171 ஆக அதிகரித்துள்ளது.
Chennai seeing an increasing trend in daily new cases in 2 weeks trend shown in the chart. Today reported 171 cases with testing increased to 19093, but TPR showing an increase to 0.9%, so there is an early sign of a resurge. #omicron pic.twitter.com/VHrDGcBKu8
— Vijayanand - Covid Data Analytics (@vijay27anand) December 26, 2021
இது, அடுத்தக்கட்ட பெரிய அளவிலான பாதிப்புக்கு ஒரு அறிகுறியாக இருக்கலாம் என்று கொரோனா தொற்று தரவுகள் நிபுணர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில், சென்னையில் 19093 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், வெறும் 171 பேருக்குத் தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும், சென்னையின் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் (Positivity Rate) அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம்?
தற்போது, சென்னையின் இந்த விகிதம் 0.9 ஆக உள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தின் இந்த விகிதம் 0.6 ஆகும். அதாவது, 100 கொரோனா மாதிரிகளை சோதனை செய்தல், 1 நபருக்கு குறைவானோருக்குத் தான் கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது.
இந்த விகிதத்தின் மூலம், சமூக அளவில் sars-cov-2 (கொரோனா வைரஸ்) பரவலின் தற்போதைய நிலை என்ன என்பதையும், நோய்த்தொற்று தாக்கத்திற்கு ஏற்ற பரிசோதனைகள் செய்யப்படுகிறதா ? என்பதையும் கணக்கிடமுடியும். எனவே, சென்னையில் உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் அதிகரித்திருப்பதன் மூலம் இரண்டு முக்கிய விஷயங்களை புரிந்துகொள்ளலாம். முதலாவதாக, சமூக அளவில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இரண்டாவதாக, கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அநேக சென்னைவாசிகள் இன்னும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.
இந்த விகிதம் 5 சதவிகிதத்துக்கும் அதிகமாக அதிகரித்தால், கொரோனா கட்டுபாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் அதிகரிக்கும் போக்கு:
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி,
புதிய பாதிப்புகளின் வருடாந்திர எண்ணிக்கை (7 days Moving average) 10%க்கும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், நிலைமைக் கட்டுக்குள் உள்ளது என்ற வரையறைக்குள் வரும்;
புதிய பாதிப்புகளின் வருடாந்திர எண்ணிக்கை 10 முதல் 20% வரை அதிகரித்தால், தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்;
புதிய பாதிப்புக்லைன் எண்ணிக்கை 20%க்கும் அதிகமாக இருந்தால், பெரிய அளவிலான தொற்று பரவல் உருவாக கூடும்.