இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்க இடைக்காலத்தடை! நீதிபதிகள் சொன்னது என்ன?
ஆரூர் தமிழ்நாடன் என்பவர் எழுதிய ‘ஜுகிபா’ கதை, ‘திக்திக் தீபிகா’ என்ற பெயரில் கடந்த 2007-ம் ஆண்டு நாவலாக வெளியானது.

இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஆரூர் தமிழ்நாடன் என்பவர் எழுதிய ‘ஜுகிபா’ கதை, ‘திக்திக் தீபிகா’ என்ற பெயரில் கடந்த 2007-ம் ஆண்டு நாவலாக வெளியானது. இந்நிலையில் 2010-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படம் வெளியானது.
இதைப்பார்த்த எழுத்தாளர் இது என்னுடைய கதை என எந்திரன் பட தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
என் கதையை திருடி எந்திரன் படத்தை எடுத்துள்ளதாகவும் அதன்மூலம் கோடிக்கணிக்கில் சம்பாரித்துள்ளதாகவும் எழுத்தாளர் வழக்கு தொடர்ந்தார். அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
அதனடிப்படையில் ஷங்கரின் 10.11 கோடி மதிப்புள்ள 3 அசையா சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்தது.
அமலாக்கத்துறை சொன்ன விளக்கத்தில், “இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘எந்திரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.290 கோடி வசூல் செய்துள்ளது. இந்த திரைப்படத்துக்காக இயக்குநர் சங்கர் ரூ.11.5 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் கதை அமைப்பு, கதாப்பாத்திரம், கருப்பொருள் கூறுகளை, ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா ஆய்வு செய்தது.
குற்றம் நிரூபணமானதால் இது குற்றமாக கருதப்படுகிறது. எனவே ஷங்கரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரூ.10.11 கோடி மதிப்புள்ள 3 அசையா சொத்துகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்து நீதிமன்றம் சொத்துக்கள் முடக்கத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஷங்கருக்கு எதிராக தீர்ப்பளித்த நிலையில் இறுதி முடிவை அறியாமல் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கை ஏப்ரல் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

