ஜல்லிக்கட்டில் இனி நாட்டு மாடுகள் மட்டுமே... உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெளிநாட்டு மாடுகளை ஜல்லிக்கட்டு போட்டிகளில் அனுமதிக்கக் கூடாதெனவும்,நாட்டு மாடுகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற உத்தரவும் முக்கியத்துவம் வாய்ந்தது! -டாக்டர் விஜயபாஸ்கர்
ஜல்லிக்கட்டில் நாட்டு இன மாடுகளை மட்டுமே அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக்கூறி சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த சேஷன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது விசாரித்த நீதிபதிகள், ‛ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வெளிநாட்டு மாடுகள், கலப்பின மாடுகள் பங்கேற்க அனுமதிக்க கூடாது,’ என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் நாட்டு மாடுகள் என கால்நடை டாக்டர்கள் சான்றளிக்க வேண்டும் என்றும், அதில் ஏதாவது மோசடி செய்து பொய் சான்றிதழ் அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் அந்த உத்தரவில் குறிப்பிட்டனர். அத்தோடு நாட்டு மாடுகள் இனப்பெருக்கத்துக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்றும் மாடுகளுக்கு செயற்கை கருத்தரித்தல் முறையை தவிர்க்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இந்த தீர்ப்பை நாட்டு மாடுகள் வளர்க்கும் பலரும் வரவேற்றுள்ளனர். குறிப்பாக முன்னாள் அமைச்சரும், காளை வளர்ப்பவருமான டாக்டர் விஜயபாஸ்கர் வரவேற்றுள்ளார். அது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறேன்!வெளிநாட்டு மாடுகளை ஜல்லிக்கட்டு போட்டிகளில் அனுமதிக்கக் கூடாதெனவும்,நாட்டு மாடுகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற உத்தரவும் முக்கியத்துவம் வாய்ந்தது!
என்று டாக்டர் விஜயபாஸ்கர் பதிவிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறேன்!வெளிநாட்டு மாடுகளை ஜல்லிக்கட்டு போட்டிகளில் அனுமதிக்கக் கூடாதெனவும்,நாட்டு மாடுகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற உத்தரவும் முக்கியத்துவம் வாய்ந்தது!
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) September 2, 2021
இதே போல மேலும் பலரும் இந்த தீர்ப்பிற்கு தங்கள் ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
#இனிவரும்தமிழர்
— RG.krishnan (@RGkrish56265634) September 2, 2021
திருநாள் ஜல்லிக்கட்டு விளையாட்டில் நாட்டு மாடுகள் மட்டும் விளையாட
அனுமதி''' சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு!!!
வெளிநாட்டு மாடுகள் விளையாட்டி பங்கேற்க தடை செய்யப்பட்டுள்ளது,
நாட்டு மாடுகள் இனம்
அதிகரிக்க இந்த முடிவு.....
அதே நேரத்தில்... நாட்டு மாடுகள் அல்லாமல் ஜல்லிக்காட்டு காளைகள் வளர்ப்போர் கவலையடைந்துள்ளனர்.