மேலும் அறிய

கொசுவை விரட்ட ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு: சென்னை மாநகராட்சியின் புதுமுயற்சி..!

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நீர்வழித்தடங்களில் கொசுக்களை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி நடைபெறவிருக்கிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நீர்வழித்தடங்களில் கொசுக்களை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி நடைபெறவிருக்கிறது.

இதனை 15 நாட்களுக்கு சோதனை முறையில் செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சோதனை முயற்சியாக கடந்த ஜூன் 26ம் தேதியன்று கூவர் ஆறு, ஓட்டேரி நுல்லா, பக்கிங்காம் கால்வாய்ப் பகுதிகளில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. இதற்காக அண்ணா பல்கலைக்கழகத்திடமிருந்து 3 ட்ரோன்கள் வாடகைக்குப் பெறப்பட்டன. இத்திட்டம் குறித்து மாநகராட்சி ஊழியர் ஒருவர் கூறும்போது, "மாநகராட்சி ஊழியர்கள் பெரும்பாலும், கால்வாய்கள், கூவம் ஆற்றுக் கரைகளில் தான் கொசு மருந்தை தெளிப்பார்கள். ஆனால், நீர்வழித்தடங்களில் மருந்தை தெளிக்க முடியாது. அங்கேதான் கொசு உற்பத்தி அதிகமாக இருப்பதால் ட்ரோன் மூலம் கட்டுப்படுத்தும் திட்டத்தை ரூ.10 லட்சம் செலவில் மேற்கொள்கிறோம்" என்றார்.

கொசு ஒழிப்புப் பணி தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொசு ஒழிப்பு பணியாளர்களைக் கொண்டு மருந்து தெளிப்பான்கள், பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் ஸ்ப்ரேயர்கள், கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்களின் மூலம் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நீர்வழித்தடங்களில் பணியாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி, மனித ஆற்றல் பயன்படுத்தப்படுவதை தவிர்க்கவும் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருந்து தெளிக்கும் பணிகளை மேற்கொள்ள நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி அறிவுறுத்தினார்.

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் AVIONICS துறையுடன் இணைந்து, நீர்வழித்தடங்களில் உள்ள கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்கள் ஆகியவற்றை அழிக்க சோதனை முறையில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியினை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி 26.06.2021 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மாநகராட்சியின் சார்பில் இன்று முதல் (ஜூலை 01) தொடர்ந்து 15 நாட்களுக்கு ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு கொசுப்புழுக்களை கட்டுப்படுத்தும் வகையில் பக்கிங்ஹாம், கொடுங்கையூர், வியாசர்பாடி, கேப்டன் காட்டன், கூவம், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம், அடையாறு, வீராங்கல் ஓடை மற்றும் மாம்பலம் ஆகிய கால்வாய்களில், சுமார் 140 கி.மீ. நீளத்திற்கு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாள் ஒன்றுக்கு மூன்று மண்டலங்களில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படும். ஒவ்வொரு இடத்திலும் மருந்து தெளிக்கப்படும் நாளுக்கு முன்னதாக, கொசுப்புழு அடர்த்தி அளவு கணக்கிடப்பட்டு, மருந்து தெளித்த 24 மணிநேரத்திற்கு பிறகு அதே இடத்தில் கொசுப்புழு அடர்த்தி மீண்டும் கணக்கீடு செய்யப்படும். இதன்மூலம், கொசுப்புழுக்களின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படுவது உறுதிசெய்யப்படும். மேலும், நாள்தோறும் எந்தெந்த மண்டலங்களில் ட்ரோன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை https://www.gccdrones.in/ என்ற இணையதள இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget