TN Rain Alert: டிசம்பர் 19 முதல் மீண்டும் மழை.. ஹாட்ரிக் அடிக்கும் சென்னை மாநகர மழைப்பதிவு.. தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட்..
1813 முதல் 2021 வரையிலான சென்னை நகர வரலாற்றில், அக்டோபர்-டிசம்பர் காலத்தில் 1000 மி.மீ மழை என்ற ஹாட்ரிக் மழையைப் பெற்றதில்லை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
1813 முதல் 2021 வரையிலான சென்னை நகர வரலாற்றில் (கிடைக்கும் மழைப்பொழிவு தரவு ஆண்டுகள்), அக்டோபர்-டிசம்பர் கால கட்டத்தில் (வட கிழக்குப் பருவமழை) 1000 மி.மீ மழை என்ற ஹாட்ரிக் மழையைப் பெற்றதில்லை.
2020 - 1034 மி.மீ, 2021 - 1485 மி.மீ, 2022 - 905 மிமீ (12.12.2022 வரை) நேற்று மாலை 5.30 மணி வரை 19 மி.மீ. இந்த ஆண்டு இது வரை 924 மி.மீ. மழை சென்னை மாநகரில் (நுங்கம்பாக்கம்) இதுவரை பதிவாகியுள்ளது. அரிதான 1000 மி.மீ. மழை பதிவு கிடைக்க இன்னும் 76 மி.மீ மழை தேவைப்படுகிறது. வரும் டிசம்பர் 19-ஆம் தேதி முதல் மழை தொடரும் என்பதால் இந்த ஆண்டும் 1000 மி.மீ மழை பதிவாகும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் மாண்டஸ் புயல் உருவாகி மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதி கனமழை முதல் மிக கனமழை பெய்தது. தொடர்ந்து அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கம்: 19.1 மி.மீ, மீனம்பாக்கம்: 34.2 மி.மீ, கோவை: 4.0 மி.மீ, குன்னூர்: 3.0 மி.மீ, தருமபுரி: 5.0 மி.மீ, கொடைக்கானல்: 25.0 மி.மீ, மதுரை விமான நிலையம்: 0.1 மி.மீ, புதுச்சேரி: 23.0 மி.மீ, சேலம்: 1.0 மி.மீ, திருச்சிராப்பள்ளி: 1.0 மி.மீ, வேலூர்: 6.0 மி.மீ, கடலூர்: 43.0 மி.மீ, ஈரோடு: 20.0 மி.மீ, பரங்கிப்பேட்டை: 8.0 மி.மீ, தஞ்சாவூர்: 31.0 மி.மீ, திருப்பத்தூர்: 8.0 மி.மீ, திருத்தணி: 23.0 மி.மீ, உதகமண்டலம்: 3.0 மி.மீ, வால்பாறை: 0.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை பொறுத்த வரையிலும் அக்டோபர் 1 முதல் இன்று வரையிலும் வடகிழக்கு தமிழகத்தில் மொத்தமாக 401 மி.மீ மழை பதிவாகியுள்ளது இது இயல்பான அளவுதான். அதேபோல, சென்னையில் 756 மி.மீ மழை பதிவாகியுள்ளது, இயல்பான மழையின் அளவு 736 மி.மீட்டர். இயல்பை விட 16 சதவீதம் அதிகம் மழை அதிகமாக பதிவாகியுள்ளது.
சென்னையில் அக்டோபரில் இருந்து இந்த மாதம் 9 ஆம் தேதி முன்பு வரை இயல்பை விட 1% குறைவாக இருந்தது தற்போது இயல்பை விட 16 சதவீதம் அதிகமாக உள்ளது. காஞ்சிபுரத்தில் ஒன்பதாம் தேதிக்கு முன்பு 4 சதவீதம் அதிகமாக இருந்தது 35 சதவீதம் இயல்பு விட அதிகமாக உள்ளது.
ராணிப்பேட்டையில் புயலுக்கு முன்பு வரையிலும் 19% குறைவாக இருந்தது, இப்போது 10 சதவீதம் அதிகமாக உள்ளது. திருவள்ளூரில் புயலுக்கு முன்பு வரையில் 9 சதவீதம் குறைவாக இருந்தது 16 சதவீதம் அதிகமாக இருக்கிறது.வேலூரில் புயலுக்கு முன்பு வரையிலும் 34 சதவீதம் குறைவாக இருந்தது தற்பொழுது 17 சதவீதம் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.