மேலும் அறிய

'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்

அடிப்படை வசதி செய்துகொடுக்காத காரணத்தால், மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகினர். கூட்ட நெரிசலில் சிக்கி, நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்- ஈபிஎஸ்

சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில், மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை எனவும் அதைச் செய்யாதது உளவுத் துறையின் தோல்வி என்றும் இது கையலாகாத்தனம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

5 பேர் பலி, 102 பேர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியைக் காணச் சென்ற பொதுமக்களில் 5 பேர் வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தனர். 102 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர். அரசு உரிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்யாததே இதற்குக் காரணம் என்று எதிர்க் கட்சிகளும் பொது மக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், வான் சாகச நிகழ்ச்சி உயிரிழப்புக்கு திமுக அரசே காரணம் என்று எதிர்க் கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து இன்று சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

சாகச நிகழ்ச்சிக்கு வந்த பொது மக்கள் அருந்த போதிய குடிநீர் வசதி செய்யப்படவில்லை. அடிப்படை வசதி செய்துகொடுக்காத காரணத்தால், மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகினர். கூட்ட நெரிசலில் சிக்கி, நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் எவ்வளவு பேர் கூடுவார்கள் என்று தகவலை உளவுத் துறை மூலம் பெற்று, அதற்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்திருந்தால், இத்தனை பிரச்சினை ஏற்பட்டிருக்காது.

பொம்மை முதல்வரே காரணம்

முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுவிட்டு போதிய ஏற்பாடுகளை செய்யாமல் விட்டது அவரின் செயலற்ற தன்மை, கையாலாகாத தனத்தைக் காட்டுகிறது. இது வெட்ககேடான விஷயம். இதே விமான சாகச நிகழ்ச்சியை பல்வேறு மாநிலங்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளன. ஆனால் தமிழகத்தில் அப்படி நடக்கவில்லை. திறமையற்ற பொம்மை முதல்வர் செயல்பட்டு வரும் காரணத்தால், இவ்வாறு நடந்துள்ளது.

செய்யத் தவறிய திமுக அரசு

மக்களைக் காப்பதுதான் அரசின் கடமை. இது உளவுத்துறையின் தோல்வி. இதைச் செய்யத் தவறியது திமுக அரசு. முதல்வர் ஸ்டாலின்தான் நிகழ்ச்சியைக் கண்டுகளியுங்கள் என்று அறிவிப்பை வெளியிட்டார். அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, போதிய முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை. 

அதிமுக ஆட்சிக் காலத்தில் திமுக அரசியல் செய்யவில்லையா? அரசே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம். இழப்பீடுகள் எந்த வகையிலும் போதாது.  விலைமதிப்பற்ற உயிர்களுக்கு அவை எவ்விதத்திலும் ஈடாகாது’’ . 

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Vijay Sethupathi :
Vijay Sethupathi : "இது என் படத்தோட ப்ரோமோஷன்..அத பத்தி ஏன் பேசனும்?" சூடான விஜய் சேதுபதி
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு  விளக்கம்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
Embed widget