சென்னை கடற்கரை-செங்கல்பட்டு ரயில் சேவை பாதிப்பு: 12 ரயில்கள் ரத்து! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
Train Cancel: "சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே 12 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது"

Chengalpattu Train Cancel: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 12 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையின் முக்கிய வழித்தடம்
செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை வரை இயங்கக்கூடிய ரயில் சேவை, சென்னையின் மிக முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது. நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும், இந்த வழித்தடத்தில் பணி நிமிர்த்தமாக சென்னை புறநகர் பகுதிக்கும், அதேபோன்று சென்னை புறநகர் பகுதியில், இருந்து சென்னை நகர் பகுதிக்கும் சென்று வருகின்றனர். எனவே, சென்னையின் மிக முக்கிய போக்குவரத்து வழித்தடமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடம் இருந்து வருகிறது.
அவ்வப்போது, இந்த வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த சமயங்களில் கூடுதலாக சிறப்பு ரயில்களும், இயக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் ரயில் பாதை மேம்பாடு பணி காரணமாக சென்னை கடற்கரை -செங்கல்பட்டு இடத்தில் இன்று 12 மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரம் - Chennai Train Cancel
காலை 9:55 மணிக்கு செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி வரையிலான ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 10:40 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 11 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 11:30 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
பகல் 12 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மதியம் 1 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
ஒரு பகுதி ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரம்
காலை 8:31 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் ரயில் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும்.
காலை 9:02 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் ரயில் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும்.
காலை 9:31 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் ரயில் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும்.
காலை 9:51 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் ரயில் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும்.
காலை 10:56 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் ரயில் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும்.
சிறப்பு ரயில்கள்
காட்டாங்குளத்தூர் பகுதியில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 10:31 மணியளவில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இதேபோன்று காட்டாங்குளத்தூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.





















