Chelladurai Ayya Death: மாரி, தெறி படத்தில் நடித்த நடிகர் செல்லதுரை காலமானார்
மாரி , தெறி படங்களில் நடித்த மூத்த நடிகர் செல்லதுரை அய்யா நேற்று இரவு காலமானார்
மூத்த நடிகர் செல்லத்துரை உடல் நலக்குறைவால் நேற்று (ஏப்ரல் 29, 2021) காலமானார். அவருக்கு வயது 84 . அவர் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார் .
அவரது மகனின் வார்த்தைகளின்படி, செல்லதுரை வியாழக்கிழமை மாலை அவரது குளியலறையில் மயக்க நிலையில் காணப்பட்டார். மரணத்திற்கான காரணம் மாரடைப்பு என அடையாளம் காணப்பட்டுள்ளது. செல்லதுரை அய்யாவின் இறுதிச் சடங்குகள் இன்று (ஏப்ரல் 30, 2021) நடைபெறும் என்று கூறப்படுகிறது.
மாரி , தெறி போன்ற திரைப்படங்களில் மறக்க முடியாத சில காட்சிகளை செல்லத்துரை தனது பார்வையாளர்களுக்கு வழங்கியிருந்தார். அவரது "அப்படியா விசயம்" மீம் இன்னும் பலரால் இணையத்தில் பகிரப்படும் டெம்ப்ளட் . இதேபோல் தெறியிலும் , காணாமல் போன தனது மகளைத் தேடி ஒரு மனச்சோர்வடைந்த தந்தையின் கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் அந்த பத்திரத்தில் தனது அற்புதமான நடிப்பால் பலரை கண்ணீரில் ஆழ்த்தி இருப்பார் .
நடிகர் விவேக்கின் இழப்பு , இயக்குநர் கே.வி.ஆனந்த் தற்பொழுது செல்லதுரை அய்யா இழப்பு என்று தமிழ் திரைத்துறையை மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளது .