மேலும் அறிய

Cauvery: காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு: காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி

தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 9ஆம் தேதி வரை 37.9 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தர வேண்டும். ஆனால், 3 டி.எம்.சி. தண்ணீர்தான் வழங்கியுள்ளதாக தெரிகிறது.  

இதையும் படிக்க: இந்திய சட்டங்களுக்கு இந்தியில் பெயரா? மொழி சர்வாதிகாரம் என கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்

காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னையை தீர்க்க அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம்:

இந்த சூழலில், தேசிய தலைநகர் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது கூட்டம் இன்று நடந்தது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழ்நாடுக்கு 38 டி.எம்.சி தண்ணீரை உடனே திறக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. ஆனால், கர்நாடகம் தண்ணீர் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. எனவே, கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தமிழ்நாடு அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். 

தண்ணீர் தர மறுத்த கர்நாடகம்:

இந்த நிலையில், கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பின்பு, செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா கூறுகையில், "தமிழ்நாட்டில் கடந்த 9ஆம் தேதி நிலவரப்படி 37.9 டி.எம்.சி. தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் நாள்தோறும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றது.

இந்த விஷயத்தை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.  இந்த கூட்டத்திலும், தமிழ்நாட்டுக்குரிய நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்க மறுத்ததால் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து வெளியேறினோம். கடந்த 9ஆம் தேதி வரை 37.9 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை" என்றார்.

இதையும் படிக்க: UPI Payment: வாவ்.. இனி வாய்ஸ் நோட் மூலமே பணம் அனுப்பலாம்... யு.பி.ஐ. லைட் சேவையில் வரப்போகும் அதிரடி மாற்றம்..!

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

மூவர்ணத்தில் ஜொலித்த வங்கக்கடல்! 20 நாட்டிகல் மைல் தூரம் கடலுக்குள் சென்று போலீசார் நடத்திய பிரம்மாண்ட பேரணி!
மூவர்ணத்தில் ஜொலித்த வங்கக்கடல்! 20 நாட்டிகல் மைல் தூரம் கடலுக்குள் சென்று போலீசார் நடத்திய பிரம்மாண்ட பேரணி!
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Embed widget