நாளை காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம் - தமிழகத்திற்கு என்ன ஆதாயம்?
காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் நடைபெற உள்ள விவாதத்தின் மூலம் தமிழகத்திற்கு பலன் கிடைக்குமா?

காவிரி நதிநீர் பகிர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாடு, கர்நாடகா இடையே உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகிறது. காவிரி ஆற்றுநீர் தொடர்பாக மாநிலங்களுக்கு இடையேயான நீர் பகிர்வைச் சட்டப்படி அமல்படுத்துதல், அணைகளின் இயக்கத்தைக் கண்காணித்தல் மற்றும் மாநிலங்களின் முறையீடுகளை விசாரித்து இறுதி உத்தரவு பிறப்பிப்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகார வரம்பிற்குள் வருகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி
அணைகளின் நிலை, நீர்வரத்து மற்றும் நீர் இருப்பு ஆகியவற்றை கண்காணித்து காவிரி ஒழுங்காற்று குழு வழங்கும் பரிந்துரைகள் மற்றும் மாநிலங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் இறுதி உத்தரவை பிறப்பிக்கும்.
நன்மை பயக்குமா? ஆலோசனைக்கூட்டம்
இந்நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 60-வது ஆலோசனைக்கூட்டம் அதன் தலைவர் ஹல்தர் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் இக்கூட்டத்தில் காவிரி ஆற்றிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்ட நீர் குறித்த தரவுகளின் அடிப்படையில் விவாதம் நடைபெறும் எனவும் எனத்தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தமிழகத்திற்கான நீர் பற்றாக்குறை மற்றும் பாசனத்தேவைகள் குறித்து அரசின் சார்பில் அதிகாரிகள் கோரிக்கைகளை முன்வைப்பார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், டெல்டாவின் கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் முழுமையாக சென்று சேரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வருவதாக கூறப்படும் நிலையில் கூடுதல் நீர்த்தேவைக்காக நாளை நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















