மேலும் அறிய

காவிரி டெல்டாவில் கருகும் நெற்பயிர்கள்: தடையற்ற மின்சாரம் வழங்க அன்புமணி கோரிக்கை!

காவிரி பாசன மாவட்டங்களில் நீரின்றி நெற்பயிர்கள் கருகிவிட்டன. தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி.

காவிரி பாசன மாவட்டங்களில் நீரின்றி கருகும் நெற்பயிர்கள்: தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் கூறி உள்ளதாவது:

‘’தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருக்கும் குறுவை பருவ நெல் பயிர்கள் போதிய அளவு தண்ணீர் பாய்ச்சப்படாததால் கருகத் தொடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. நிலத்தடி நீரை நம்பி சாகுபடி செய்யப்பட்ட இந்தப் பயிர்கள் கருகுவதற்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படாதது தான் காரணம் ஆகும்.

காவிரி பாசன மாவட்டங்களில் பெரும்பாலும் காவிரி நீரை மட்டுமே நம்பி நெல் சாகுபடி செய்யப்படுகிறது.  குறுவை பாசனத்திற்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். நடப்பாண்டிலும் அவ்வாறு தண்ணீர்  திறக்கப்படுவது  உறுதி செய்யப் பட்டிருந்தால்  குறைந்தது  6 லட்சம் ஏக்கரில் குறுவை  பருவ நெல் நடவு செய்யப்பட்டிருக்கும்.

ஒரு லட்சம் ஏக்கரில் நெல்  நடவு

மேட்டூர் அணையிலிருந்து  தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பில்லை என்பது  உறுதி செய்யப்பட்ட நிலையில், நிலத்தடி நீரை நம்பி காவிரி பாசன மாவட்டங்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கரில் நெல்  நடவு செய்யப்பட்டுள்ளது.  பல இடங்களில்  ஒரு மாதத்திற்கு முன்பாகவே  நடவு செய்யப்பட்டு விட்டதால் அவை நன்றாக வளர்ந்து நிற்கின்றன. முறையாக தண்ணீர் பாய்ச்சப்பட்டால்  இன்னும் சில வாரங்களில் அவை கதிர் விடத் தொடங்கி விடும்.

காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த  சில வாரங்களாக போதிய அளவு மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால்  நீர் இறைப்பான்கள் மூலம்  நிலத்தடி நீரை பாய்ச்ச முடியாததால்,  வயல்வெளிகள் பாலம் பாலமாக வெடிக்கத்  தொடங்கியுள்ளன.  நெற்பயிர்களும் கருகத் தொடங்கியுள்ளன.  உடனடியாக தண்ணீர் பாய்ச்சப்படவில்லை என்றால்  அரும்பாடு பட்டு வளர்த்த பயிர்கள் கருகி விடும் என்ற கவலையில்  விவசாயிகள் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

தடையற்ற மின்சாரம்

விதை, நடவு, உரம், களையெடுத்தல்  ஆகியவற்றுக்காக மட்டும்  ஒரு ஏக்கருக்கு  ரூ.30 ஆயிரம் வரை உழவர்கள் செலவழித்துள்ளனர். இத்தகைய சூழலில்  நன்றாக வளர்த்தெடுக்கப்பட்ட நெற்பயிர்களை காப்பாற்றாவிட்டால் உழவர்களுக்கு  பெரும் இழப்பு ஏற்படும்.  பயிர்களைக் காப்பாற்ற  தடையற்ற மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்பதைத் தவிர  அரசிடம் உழவர்கள் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. உழவர்களின் எதிர்பார்ப்பு அரசால் நிறைவேற்ற முடியாதும் இல்லை.

எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நெற்பயிர்களைக் காப்பாற்றுவதற்காக  ஒரு நாளைக்கு குறைந்தது  18 மணி நேரமாவது  தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கவும், வழக்கமாக வழங்கப்படும்  குறுவைத்  தொகுப்புடன்  ரூ.5000 இடுபொருள் மானியம் வழங்கவும்  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Indian Army: ராணுவத்தில் சேரப் போறீங்களா இளைஞர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! ஆகஸ்ட் 1 முக்கிய முகாம்!
ராணுவத்தில் சேரப் போறீங்களா இளைஞர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! ஆகஸ்ட் 1 முக்கிய முகாம்!
" என் கணவரை பிடிக்கல " வெளியூரில் ரூம் போட்டு திருமணம் மீறிய உறவு - சிக்கிய எலக்ட்ரிஷியன்
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (22-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்கும்? இருக்காது? - லிஸ்டை வெளியிட்ட மின் வாரியம்
தமிழகத்தில் நாளை (22-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்கும்? இருக்காது? - லிஸ்டை வெளியிட்ட மின் வாரியம்
Thanjavur power cut 22.07.2026: நாளைய மின்தடைக்கு மக்களே இன்றே தயாராகிடுங்க
Thanjavur power cut 22.07.2026: நாளைய மின்தடைக்கு மக்களே இன்றே தயாராகிடுங்க"
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi Arrested: சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது
சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது
Iran Starts Nuclear Program: தலைக்கு தில்ல பாத்தியா.! அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கும் ஈரான்.? இஸ்ரேல் பரபரப்பு தகவல்
தலைக்கு தில்ல பாத்தியா.! அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கும் ஈரான்.? இஸ்ரேல் பரபரப்பு தகவல்
Tasmac cigarettes ban : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! இனி டாஸ்மாக் பார்களில் சிகரெட்டிற்கு தடை- வெளியானது புதிய கட்டுப்பாடுகள்
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! இனி டாஸ்மாக் பார்களில் சிகரெட்டிற்கு தடை- வெளியானது புதிய கட்டுப்பாடுகள்
Singer Arivu arrest : தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
Galaxy S25 Ultra Price Crash: அடேங்கப்பா, ரூ.50,000-க்கு மேல தள்ளுபடியா.?! கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிற்கு இதுவரை இல்லாத ஆஃபர்; விட்றாதீங்க
அடேங்கப்பா, ரூ.50,000-க்கு மேல தள்ளுபடியா.?! கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிற்கு இதுவரை இல்லாத ஆஃபர்; விட்றாதீங்க
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Tata Nexon EV on EMI: ரூ.2 லட்சம் இருக்கா.? விற்பனையில் பட்டையை கிளப்பும் டாடா நெக்ஸான் EV கார வாங்கலாம்; EMI எவ்வளவு வரும்.?
ரூ.2 லட்சம் இருக்கா.? விற்பனையில் பட்டையை கிளப்பும் டாடா நெக்ஸான் EV கார வாங்கலாம்; EMI எவ்வளவு வரும்.?
Embed widget