மேலும் அறிய
புகார்.. வழக்குப்பதிவு.. ஹிஜாப்பை அகற்றச்சொன்ன பாஜக முகவரை கைது செய்த போலீஸ்!
மதுரையில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணை ஹிஜாப்பை அகற்றச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. முகவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.க. முகவர் கிரிராஜன்
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், மதுரை மேலூரில் வாக்களிக்க வந்த வாக்குச்சாவடிக்கு வந்த பெண் வாக்காளரிடம், தலையில் உள்ள ஹிஜாப்பை அகற்றச் சொல்லி வாக்குச்சாவடியில் இருந்த பா.ஜ.க. முகவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அந்த பா.ஜ.க. முகவர் கிரிராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏற்கனவே பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















