மேலும் அறிய

கச்சத்தீவு மீட்பு விவகாரம்...மத்திய அரசின் முடிவில் உயர் நீதிமன்றம் தலையிட முடியுமா? தலைமை நீதிபதி பரபர கருத்து!

கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவில் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவில் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

கச்சத்தீவு மீட்பு விவகாரம்:

கச்சத்தீவு மீட்பு என்பது அரசியில் களத்தில் புதிய முழக்கம் அல்ல. தமிழ்நாட்டில்  ஆட்சியில் இருக்கும் திமுக மற்றும் அதன் எதிர்க்கட்சியான அதிகமுகவும் கச்சத்தீவை மீட்போம் என்று பல தேர்தலில் வாக்குறுதி வழங்கியுள்ளன. இந்த விவகாரம் தற்போது வரை நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டு வருகிறது. நூறு ஆண்டுகளாக நிலவி வரும் இந்த விவகாரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நேரத்தில் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. திமுக, அதிமுக, பாஜக என கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன. சமீபத்தில் கூட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலக்கைக்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதாக வரலாறு தெரியாமல் உளறிக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில், இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை  இந்த விவகாரம் பேசப்பட்டது.

மதுரை கிளையில் மனு:

சென்னையைச் சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு கச்சத்தீவு ராமேஸ்வரத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. பின்னர்  இந்தியா மற்றும் இலங்கை செய்து கொண்ட உடன்படிக்கையின் படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது.  இந்த உடன்படிக்கையின் படி பாரம்பரியமாக மீன் பிடிப்பு தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எந்த இடையூறும் செய்யக்கூடாது என உள்ளது. 
 
1983 முதல் 2005 வரை 378 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என RTI தகவல் உள்ளது. இதுவரை தமிழக மீனவர்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளை இழந்துள்ளனர். அதன் பின்பு 2013 ஆம் ஆண்டு 111 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.  இந்த ஆண்டு ஜூன் 26ஆம் தேதி 22 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  

”மத்திய அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது"

1974 ம் ஆண்டு இந்தியா - இலங்கை செய்து கொண்ட உடன்படிக்கையின் படி இலங்கை கடற்படையினர் மீறி உள்ளனர். எனவே, இடைக்கால உத்தரவாக 22 மீனவர்களை இந்தியா கொண்டுவர உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும், 1974 ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை என இரு நாடுகளுக்கு இடையேயான உடன்படிக்கையை ரத்து செய்து கச்சத்தீவை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை மத்திய  அரசு எடுக்க உத்தரவிட வேண்டும்" எனவும் மனுவில் கூறியிருந்தார். 
 
இந்த மனு தலைமை நீதிபதி கங்க பூர்வாலா, நீதிபதி குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் கச்சத்தீவு மீட்பு விவகாரம் என்பது ஒன்றிய அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் நீதிமன்றம் ஒருபோதும் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
3-Language Policy  : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
3-Language Policy : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
3-Language Policy  : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
3-Language Policy : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர்  ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர் ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
5th Generation Aircraft: ஆத்தி..! 5வது தலைமுறை போர் விமானங்கள், எந்தெந்த நாடுகளிடம் உள்ளன? மிகவும் ஆபத்தான மாடல் எது?
5th Generation Aircraft: ஆத்தி..! 5வது தலைமுறை போர் விமானங்கள், எந்தெந்த நாடுகளிடம் உள்ளன? மிகவும் ஆபத்தான மாடல் எது?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.