மேலும் அறிய

உலக சாதனை படைத்த குகேஷ்.. சர்ப்ரைஸ் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.. வாவ்!

Champion Gukesh: குகேஷை பாராட்டும் விதமாக, உயரிய ஊக்கத்தொகையாக 75 லட்சம் ரூபாய் காசோலையை முதலமைச்சர் அவருக்கு வழங்கினார். 

FIDE கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ்க்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார்.

குகேஷ்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த முதலமைச்சர்:

கனடாவின் டொரொண்டோவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் டோர்ன்மெண்டில், தமிழ்நாட்டை சேர்ந்த 17 வயது வீரரான குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். விஸ்வநாதன் ஆனந்தை தொடர்ந்து இந்த பட்டத்தை வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் குகேஷ் படைத்தார்.

கேண்டிடேட்ஸ் போட்டியில் பங்கேற்ற இரண்டாவது இளம் வயது வீரர், இந்த சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வயது வீரர் என்ற சாதனைகளையும் குகேஷ் படைத்து செஸ் வரலாற்றில் தடம் பதித்திருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் குகேஷ் இன்று சந்தித்தார்.

குகேஷை பாராட்டும் விதமாக, உயரிய ஊக்கத்தொகையாக 75 லட்சம் ரூபாய் காசோலையை முதலமைச்சர் அவருக்கு வழங்கினார்.

இளம் வயது சாதனைகள்:

கடந்த 2015ம் ஆண்டு 9 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான, ஆசிய பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை குகேஷ் வென்றார். தொடர்ந்து, 2018ம் ஆண்டு 12 வயதுக்குட்பட்ட உலக இளம் விரர்களுக்கான செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை தனதாக்கினார்.

பல்வேறு பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை குவித்த அவர், மார்ச் 2018-இல் 34 வது Cappelle-la-Grande Open இல் சர்வதேச மாஸ்டர் பட்டத்திற்கான புள்ளிகளை பெற்றார்.

கிராண்ட் மாஸ்டர் ஆன குகேஷ்:

12 வயது ஏழு மாதங்கள் 17 நாட்களில் இந்தியாவின் இளைய கிராண்ட்மாஸ்டர் ஆனார். அதன் மூலம் உலகின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை  வெறும் 17 நாட்களில் அவர் தவறவிட்டார். செஸ் ஒலிம்பியாடில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2700-க்கும் அதிகமான புள்ளிகளை பெற்றார். இதன் மூலம், செஸ் உலகில் இளம் வயதில் 2700 புள்ளிகளை கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை குகேஸ் பெற்றார். அதோடு, உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இளம் வீரர் என்ற சாதனயை, 2022ல் குகேஷ் படைத்தார். 

ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் வகித்து வந்த நாட்டின் முதல் நிலை விரர் என்ற பட்டத்தை, 36 ஆண்டுகளுக்குப் பிறகு பறித்து குகேஷ் சரித்திரம் படைத்தார்.  உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும், குகேஷ் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: CSK Vs SRH, IPL 2024: ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா சென்னை? சேப்பாக்கத்தில் ஐதராபாத் உடன் இன்று மோதல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Air India Flight: 70 ஏர் இந்திய விமானங்கள் திடீர் ரத்து! ஊழியர்களுக்கு என்னாச்சு? மாஸ் லீவ்!
Air India Flight: 70 ஏர் இந்திய விமானங்கள் திடீர் ரத்து! ஊழியர்களுக்கு என்னாச்சு? மாஸ் லீவ்!
தமிழ் புதல்வன் திட்டத்தால் மாணவர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! மாதாமாதம் ரூ.1000: எப்போது?
தமிழ் புதல்வன் திட்டத்தால் மாணவர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! மாதாமாதம் ரூ.1000: எப்போது?
Breaking Tamil LIVE: நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எலும்பு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
Breaking Tamil LIVE: நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எலும்பு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
Silambarasan TR: கமலுடன் களமிறங்கிய சிலம்பரசன்.. தெறிக்க விடும் “தக் லைஃப்” படத்தின் புது போஸ்டர்!
Silambarasan TR: கமலுடன் களமிறங்கிய சிலம்பரசன்.. தெறிக்க விடும் “தக் லைஃப்” படத்தின் புது போஸ்டர்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Chennais Amirta Aviation : Hotel Management-ஐ தொடர்ந்து விமானக் கல்லூரி! சென்னைஸ் அமிர்தா அசத்தல்K V Thangabalu : ”பணம் வாங்கினேனா? ஜெயக்குமார் சொன்னது பொய்” கே.வி.தங்கபாலுVeeralakshmi Slams Savukku Shankar : MS Dhoni injury : தோனிக்கு என்ன ஆச்சு? CSK-ல் நடப்பது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India Flight: 70 ஏர் இந்திய விமானங்கள் திடீர் ரத்து! ஊழியர்களுக்கு என்னாச்சு? மாஸ் லீவ்!
Air India Flight: 70 ஏர் இந்திய விமானங்கள் திடீர் ரத்து! ஊழியர்களுக்கு என்னாச்சு? மாஸ் லீவ்!
தமிழ் புதல்வன் திட்டத்தால் மாணவர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! மாதாமாதம் ரூ.1000: எப்போது?
தமிழ் புதல்வன் திட்டத்தால் மாணவர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! மாதாமாதம் ரூ.1000: எப்போது?
Breaking Tamil LIVE: நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எலும்பு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
Breaking Tamil LIVE: நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எலும்பு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
Silambarasan TR: கமலுடன் களமிறங்கிய சிலம்பரசன்.. தெறிக்க விடும் “தக் லைஃப்” படத்தின் புது போஸ்டர்!
Silambarasan TR: கமலுடன் களமிறங்கிய சிலம்பரசன்.. தெறிக்க விடும் “தக் லைஃப்” படத்தின் புது போஸ்டர்!
West Nile virus: கேரளாவில் பரவும் வெஸ்ட் நைல் காய்ச்சல்.. தடுப்பு நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத்துறை தீவிரம்
கேரளாவில் பரவும் வெஸ்ட் நைல் காய்ச்சல்.. தடுப்பு நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத்துறை தீவிரம்
Ameer: நீட் தேர்வு எழுத சென்று எழுதாமல் திரும்பி வந்த அமீரின் மகள்..! நடந்தது என்ன தெரியுமா?
நீட் தேர்வு எழுத சென்று எழுதாமல் திரும்பி வந்த அமீரின் மகள்..! நடந்தது என்ன தெரியுமா?
Lok Sabha Phase 4 Polling: அடுத்த மூவ் நான்காம் கட்ட வாக்குப்பதிவு: ஆந்திராவில் ரோடு ஷோவுக்கு தயாராகும் மோடி!
Lok Sabha Phase 4 Polling: அடுத்த மூவ் நான்காம் கட்ட வாக்குப்பதிவு: ஆந்திராவில் ரோடு ஷோவுக்கு தயாராகும் மோடி!
Google Pixel 8a: பிரீமியம் AI தொழில்நுட்பத்துடன் கூகுள் பிக்சல் 8a செல்போன் இந்தியாவில் அறிமுகம் - அதுவும் இந்த விலைக்கா?
Google Pixel 8a: பிரீமியம் AI தொழில்நுட்பத்துடன் கூகுள் பிக்சல் 8a செல்போன் இந்தியாவில் அறிமுகம் - அதுவும் இந்த விலைக்கா?
Embed widget