Sasikala: ஓ.பன்னீர்செல்வம் மகன் எம்.பி. ரவீந்திரநாத்தை செயல்படவிடாமல் தடுக்கும் இபிஎஸ்.. சசிகலா கண்டனம்
Sasikala: ஓ.பன்னீர் செல்வம் மகன் எம்.பி. ரவீந்திரநாத்தை செயல்படவிடாமல் தடுக்கும் இபிஎஸ் என சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
Sasikala: ஓ.பன்னீர் செல்வம் மகன் எம்.பி. ரவீந்திரநாத்தை செயல்படவிடாமல் தடுக்கும் இபிஎஸ் என சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். கட்சியின் ஒரே எம்.பியை செயல்படவிடாமல் தடுப்பது கண்டனத்திற்குரியது எனவும் கூறியுள்ளார்.
அதிமுக கட்சியின் ஒரே எம்.பியும் ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத்தினை இபிஎஸ் கடந்த வாரம் கட்சியில் இருந்து நீக்கினார். இந்நிலையில், தற்போது மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்தை கட்சி ரீதியாக மக்கள் பணி செய்வதை தடுக்க கூடாது என கண்டனங்களை சசிகலா தெரிவித்து, ரவீந்திரநாத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களமே கடந்த ஒரு மாத காலமாக அதிமுகவினைச் சுற்றியே உள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடங்கி, அதிமுக அலுவலகத்திற்கு சீல், ஓபிஎஸ் நீக்கிய இபிஎஸ், இபிஎஸ்ஸை நீக்கிய ஓபிஎஸ், ரவீந்திரநாத்தை நீக்கிய இபிஎஸ் என தமிழக அரசியல் களத்தின் பேசுபொருளாக இருந்துவந்தது. இந்நிலையில், கடந்த வாரம், தேனி பாராளுமன்ற மக்களவை உறுப்பினரும், அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் மகனுமான ரவீந்திரநாத்தை அதிமுகவில் இருந்து நீக்குவதாக கடிதம் மூலமாக தெரிவித்திருந்தார். இதன் மூலம் அதிமுகவின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் என ரவீந்திரநாத் தன்னை கூறிக் கொள்ளக் கூடாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இபிஎஸ்ஸின் இந்த முடிவுக்கு, முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுகவின் பொதுச்செயளாலர் ஜெயலலிதாவின் தோழியுமான சசிகலா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினரான ரவீந்திரநாத்தை கட்சியில் இருந்து நீக்குவதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மேலும், பாராளுமன்றத்தில் அதிமுகவின் பெயரினைச் சொல்ல யாருமே வேண்டாம் என்ற கண்மூடித்தனமாக முடிவு நியாயமற்றது. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என சொல்பவர்களை தொண்டர்கள் எப்படி ஏற்பார்கள்? என்ற கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது. மேலும், மரத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு அடிமரத்தினை வெட்டும் அறிவற்ற செயல் இவர்களுடையது. தன் பதவி ஆசைக்காக கட்சியினை அழிக்க நினைப்பவர்களை நினைத்து தொண்டர்கள் கவலைப் பட வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மகனுக்கு சசிகலா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது புலப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்