Rajiv Gandhi Case: ராஜீவ்காந்தி கொலை வழக்கு: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால சிறைவாசம்: நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![Rajiv Gandhi Case: ராஜீவ்காந்தி கொலை வழக்கு: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால சிறைவாசம்: நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை BREAKING Rajiv Gandhi Assassination Case Supreme Court Directs Release of Convicts Nalini Srihar RP Ravichandran Rajiv Gandhi Case: ராஜீவ்காந்தி கொலை வழக்கு: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால சிறைவாசம்: நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/11/807eaab79baf1480be8f63922f32f3191668154462723102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Supreme Court directs release of six accused including Nalini and RP Ravichandran, serving life imprisonment in connection with the assassination of former Prime Minister Rajiv Gandhi. pic.twitter.com/nguZY99Svc
— ANI (@ANI) November 11, 2022
நீண்ட ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு 6 பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நளினி, முருகன், சாந்தனு, பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 1991ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த மே மாதம் 18-ந் தேதி பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. பேரறிவாளனின் விடுதலைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளும் வரவேற்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனித்தனியே மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பேரறிவாளன் வழக்கில் அவருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு, ஏனைய 6 பேருக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
அரசியல் சட்டத்தின் 161வது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது. தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த போதிலும் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளதாக கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்தி வந்தார். இந்த சூழலில், உச்சநீதிமன்றம் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி இன்று 6 பேரையும் விடுதலை செய்து அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.
நளினி உள்பட 6 பேரையும் முன்விடுதலை செய்ய தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் கடந்த 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், பேரறிவாளன், ஜெயக்குமார், முருகன் ஆகிய 6 பேரையும் விடுதலை ஆக உள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பலரும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)